சர்வதேச அளவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான SAIC குழுமம் விற்பனை செய்து வருகின்ற கிளவுட் இவி சியூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதை உறுதி செய்யும் ஆகிலான முதல் டீசரை இன்றைக்கு வெளியிட்டுள்ளது.
Intelligent CUV என்ற பெயரில் இந்த எலக்ட்ரிக் மாடலுக்கான சோதனை ஓட்டத்தை கடத்த சில மாதங்களுக்கு மேலாக இந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில் இந்நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்திய சந்தைக்கான மாடல்களை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்ற நிலையில் முதல் மாடலாக இந்த எலக்ட்ரிக் மாடலானது விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
MG Intelligent CUV electric teased
crossover utility vehicle என அழைக்கப்படுகின்ற கிளவுட்.இவி காரின் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த மாடலானது இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. அதேபோல இந்திய சந்தைக்கு வரும் பொழுதும் இந்த மாடல் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெரும் முதலில் 37.4kwh பேட்டரி அதிகபட்சமாக 360 கிலோமீட்டர் ரேன்ஜ் ஆனது வெளிப்படுத்தலாம். அடுத்து டாப் வேரியண்டில் 50.6Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 460 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்சை வெளிப்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளியிடப்பட்டுள்ள டீசர் ஆனது ஏற்கனவே உள்ள மாடலை போலவே மிக அகலமான எல்இடி லைட் பார்க் கொண்ட முகப்பினை பெற்று எல்இடி ப்ராஜெக்டர் விளக்குகளை கொண்டிருப்பது உறுதியாக இருப்பதுடன் மிகவும் தாராளமான இட வசதி கொண்டே இருக்கைகளுடன் மேலே சன்ரூஃப் ஆனது வழங்கப்படுகின்றது.
மிகவும் தாராளமான இட வசதி வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது ஐந்து இருக்கைகளை மட்டுமே கொண்டிருப்பதுடன் பின்புற இருக்கைகளுக்கு சோபா போன்ற அமைப்பினை வெளிப்படுத்தும் வகையிலான இருக்கையை கொண்டிருக்கிறது இதனால் மிக சிறப்பான ஒரு பயன அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் குறிப்பிடுகின்றது.
குறிப்பாக இந்த காரில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாகவே 6 பேக்குகள், 360 டிகிரி கேமரா, ADAS பாதுகாப்புத் தொகுப்பினை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம் குறைந்த விலையில் எம்ஜி காமெட்.இவி மற்றும் நடுத்தர எஸ்யூவிகளுக்கான ZS EV என இரு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் தற்போது வரவுள்ள எலெக்ட்ரிக் மாடல் ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.