உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா…? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்!

Paris Olympics 2024 Anti Sex Beds:பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. ஆக. 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்தியா தரப்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் பிரதான 28 விளையாட்டுகள் உள்பட மொத்தம் 32 விளையாட்டுகள் இந்த ஒலிம்பிக்கில் நடத்தப்பட உள்ளன. 

கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்து ஒலிம்பிக், 2021ஆம் ஆண்டிலேயே நடைபெற்றது. ஒவ்வொரு ஒலிம்பிக்கும் நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் நிலையில், இந்த ஒலிம்பிக் தற்போது 3ஆவது ஆண்டிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், கடந்த ஒலிம்பிக்கை போன்று இந்தாண்டும் இந்தியா சிறப்பாக விளையாட வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். 

Anti Sex படுக்கைகள்

இவை ஒருபுறம் இருக்க டோக்கியோ ஒலிம்பிக்கை போன்று இந்த முறையும், Anti-Sex படுக்கைகள் விவகாரம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. அதாவது, வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் இந்த படுக்கைகள், கார்ட்போர்டுகளால் செய்யப்பட்டவை. இவர் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு இடையேயான உடல் ரீதியான நெருக்கத்தை தவிர்க்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதுண்டு.

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர் – வீராங்கனைகளுக்கு இடையே உடலுறவு வைத்துக்கொள்வதை தடுக்கவே, இதுபோன்ற ஒருநபர்களுக்கான கார்ட்போர்ட் படுக்கைகள் வழங்கப்படுவதாக தகவல்கள் பரவின. இதுபோன்ற படுக்கைகள் மூலம் தாங்கள் அசௌகரியமாக உணர்வதாக வீரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Daria Saville (@daria_sav)

பரிசோதித்த வீரர்கள்

மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் உறுதித்தன்மையை பரிசோதித்து அவற்றை வீடியோவும் எடுத்து தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனைகளான டாரியா சவில்லே மற்றும் எலன் பெரெஸ் ஆகியோர் இணைந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ள ஒரு வீடியோவில்,”ஒலிம்பிக் கிராமத்தின் கார்ட்போர்ட் படுக்கைகளை சோதித்து பார்த்தபோது…” என குறிப்பிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் அந்த படுக்கைகளில் குதித்து, உடற்பயிற்சி செய்து அதன் உறுதித்தன்மையை வேடிக்கையாக பரிசோதித்தது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை கவர்ந்தது. அதேபோல், அயர்லாந்து ஜிம்னாஸ்டிக் வீரர் ரைஸ் மெக்லெனகன் தனது அனைத்து வித்தைகளையும் பயன்படுத்தி அந்த மெத்தையின் உறுதித்தன்மையை பரிசோதித்ததார் எனலாம்.

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Rhys McClenaghan (@rhysmcc1)

ஒலிம்பிக் நிர்வாகம் விளக்கம்

மேலும், அந்த வீடியோவில் அவர்,”நான் அதனை பரிசோதித்தபோது அது கச்சிதமாகவே இருந்தது. நான் போதுமான அளவிற்கு ஆக்ரோஷமாக இல்லை போலும்…” என Anti-Sex படுக்கை என கூறப்படுவதை நிராகரிக்கும் வகையில் பேசியிருக்கிறார். இவர்களின் இந்த இரண்டு வீடியோக்களும், ஒலிம்பிக் வீரர்களுக்கு வழங்கப்படும் படுக்கைகள் ஒரு வீரரின் எடையை தாங்கக் கூடியதாக மட்டுமே இருக்கிறது என சொல்லப்பட்ட தகவல்களுக்கு நேர் எதிராக இருந்தது. 

இவை உறுதித்தன்மையுடன் இருந்தாலும் இவை அசௌகரியமாக இருப்பதாக இன்னும் சில வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், வீரர்களுக்கு சிறந்த சொகுசான சூழலை உருவாக்கவே இந்த படுக்கை அமைக்கப்பட்டிருப்பதாகவும், வேறு எவ்வித காரணமும் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்கள் – முதலிடத்தில் சச்சின் இல்லை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.