தாழையடியில் நடைமுறைப்பட்டுவருகின்ற நீர் விநியோக திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதியினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர் இளங்கோவன் ஆகியோருடன் இன்று (26.07.2024) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற நேர்காணலின் போது குடிநீர் விநியோக திட்டம் மற்றும் சூரிய மின்படல வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த திட்டதினுடான யாழ் மாவட்டத்தில் 3 இலட்சம் பேர் குடிநீர் வசதியை பெற்றக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 மில்லியன் பெறுமதியான குடிநீர் விநியோகத் திட்டம் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக 45 000 குடும்பங்கள் குடிநீர் வசதியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் முடிவுறுத்தப்படும்.
இதேபோல் கிளிநொச்சி பகுதியில் குடிநீர் திட்டம் ஆம்பிக்கபடவுள்ளது. இதற்கு குடிநீர் வழங்குவதற்கான நீர் சுத்திகரிப்பு நிலையமும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கடவுள்ளது.
லோவர் பாலியாறு என்னும் மிக்பெரிய நீர் வழங்கும் திட்டத்திற்காக சென்ற வரவு செலவு திட்டத்தினூடாக 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அதற்குரிய ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு மேலாக வட மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வட மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.