பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழிதடத்துக்கான விரிவான திட்ட அறிக்கை வரும் நவம்பர் மாதம் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்பதூர் வழியாக பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்டு விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் பாதை நவம்பர் மாதத்திற்குள் உறுதிப்படுத்தப்படும். ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இந்த பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ.1.74 கோடி மதிப்பில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. […]