மதுரை மதுரை உயர்நீதிமன்றக்கிளை முஸ்லிம்களை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. தமிழ்நாடு மாநில பாஜக ஆன்மீக பிரிவு மாநில செயலாளராக உள்ள குருஜி என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்தவர் ஆவார். குருஜி இஸ்லாமிய மத தூதுவர்களை மற்றும் இஸ்லாமியர்களையும் வழிபாட்டு தர்ஹாகளையும் தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்டிருந்தால், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆயினும் இவரை கைது செய்யாததால் இவரை கைது செய்யக்கோரி […]