லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் கேஎல் ராகுல் முக்கியமான வீரராக உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். இது தவிர ஐபிஎல்லில் வெறும் 132 போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். பேட்டிங்கில் 134.61 ஸ்ட்ரைக் ரேட், விக்கெட் கீப்பிங்கில் 56 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங் என பல சாதனைகளை வைத்துள்ளார். 2023 ஒருநாள் உலக கோப்பை மற்றும் தென்னாபிரிக்க தொடர்களில் விக்கெட் கீப்பிங்கில் அசத்தி இருந்தார். பல்வேறு திறமைகளை கொண்ட கேஎல் ராகுல் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஓப்பனிங் வீரராக களமிறங்கி வருகிறார். 

முன்பு இந்திய அணியிலும் ஓப்பனிங் வீரராக களமிறங்கினார். ஆனால் மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக விளையாடுவதால் அவர் பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஐபிஎல் 2024ல் ஓப்பனிங் வீரராக களமிறங்கியால் டி20 உலக கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் ஐபிஎல் 2025ல் அணியை விட்டு விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது அவருக்கும், லக்னோ அணியின் உரிமையாளருக்கும் சில மனஸ்தாபம் ஏற்பட்டது தான் இந்த முடிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கேஎல் ராகுல் அணியை விட்டு விலகினால் அவரை தங்கள் அணியில் எடுக்க சில உரிமையாளர்கள் தயராக உள்ளார். அந்த அணிகளின் விவரங்களை பற்றி பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் ஒரு புதிய அணியை எடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளது. அவர்களது தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லியின் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படாது என கூறப்படுகின்றன. மேலும் ஐபிஎல் 2024ல் கேப்டனாக இருந்த சாம் குர்ரான் மற்றும் ஷிகர் தவான் ஆகியோறும் அணியில் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை. எனவே கேஎல் ராகுல் போன்ற ஒரு வீரர் அவர்களுக்கு தேவை. ஐபிஎல் ஏலத்தில் அவரை எடுக்க பல முயற்சிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான முதல் வருடமே கோப்பையை வென்றது. அதன் பிறகு பைனலுக்கு சென்று தோல்வி அடைந்தது. இந்த ஆண்டு பிளே ஆப்பிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஹர்திக் பாண்டியா வெளியேறிய பிறகு சுப்மான் கில் தலைமையில் தோல்விகளை சந்தித்தது. குஜராத் அணியில் உள்ள விருத்திமான் சாஹா, மேத்யூ வேட் போன்ற வீரர்கள் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பர் பேட்டராக அவர்கள் தேர்வு செய்யலாம். ராகுல் குஜராத் அணியில் இணைந்தால் விக்கெட் கீப்பர், கேப்டன், ஓப்பனிங் பேட்ஸ்மேன் போன்ற பொறுப்புகளை எடுக்க நேரிடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பஞ்சாப் கிங்ஸைப் போலவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல மாற்றங்களை எதிர்பார்க்கிறது. இதற்கு முன்பு 2013 முதல் 2016 வரை ஆர்சிபி அணிக்காக கேஎல் ராகுல் விளையாடியுள்ளார். கேப்டனாக இருக்கும் ஃபாஃப் டு பிளெசிஸ் மாற்றப்பட வாய்ப்புள்ள நிலையில், ராகுல் ஆர்சிபி அணிக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் தினேஷ் கார்த்தி பேட்டிங் ஆலோசகராக பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.