வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் சுமார் 97ம% சதவீதமாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26.07.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
மிகுதியாக உள்ளவற்றில் முகமாலை, கிளிநொச்சி பகுதியிலே மக்கள் மீள் குடியேற்றப்படவேண்டிய காணிகள் உள்ளன. ஏனையவை விவசாய வயல் நிலங்களாகும். எதிர்காலத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.