மேஷம் வாரத்தின் முற்பகுதியில், ஒங்களோட உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்க, பேச்சில கவனம் தேவை. சிலர் வேண்டுமென்றே விஷமப் பேச்சுகளை பேசுவாங்க. நீங்க அதைப் பத்தியெல்லாம் நெல் முனை அளவுகூடக் கவலைப்படாம போயி சாதிச்சுக்காட்டுவீங்க. ஃபேமிலில கடந்த சில வாரங்களாக ஒங்களோட நிம்மதியை கெடுத்த சில பிரச்சினைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீங்க. முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. குடும்பத்தில் இதமான சூழ்நிலை […]