சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் அவெனிஸ் 125 என மூன்று ஸ்கூட்டர்களிலும் ஏற்படுகின்ற ஸ்டார்டிங் கோளாறு, வேக சென்சார் மற்றும் திராட்டிள் சென்சாரில் ஏற்படும் கோளாறினை சரி செய்வதற்கு திரும்ப அழைக்கப்படுகிறது.
Suzuki Recall
ரீகால் தொடர்பான அறிவிப்பில் ஏப்ரல் 30, 2022 முதல் டிசம்பர் 3, 2022 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களைப் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஸ்டார்டிங் செய்வதற்கான Ignition coilல் நிறுவப்பட்டுள்ள ஒரு தவறான உயர் அழுத்த கார்டு (High Tension Cord) காரணமாக இந்த சிக்கல் ஏற்படுகிறது. சுஸுகி இந்த சிக்கலை விவரிக்கிறது, “வரைதல் தேவைகளை பூர்த்தி செய்யாத High Tension Cord (NG) Ignition Coil நிறுவப்பட்டதால், இயங்கும் போது இயந்திர உராய்வு காரணமாக மீண்டும் மீண்டும் வளைந்ததால் உயர் அழுத்த கார்டில் விரிசல் மற்றும் உடைப்பு ஏற்படுத்தும். இதன் விளைவாக என்ஜின் ஸ்டால் மற்றும் ஸ்டார்டிங் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், விரிசல் ஏற்பட்ட ஹை டென்ஷன் கார்டு தண்ணீரில் படும் போது, வாகனத்தின் வேக சென்சார் மற்றும் த்ரோட்டில் பொசிஷன் சென்சார் ஆகியவை சேதமடைந்தால் இதன் விளைவாக ஸ்பீடு டிஸ்பிளேவில் தெரியாமல் சிக்கலை ஏற்படுத்துகின்றது.
இது போன்ற பிரச்சினைகளை சரி செய்வதற்காகவே திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.
சுசூகி வெளியிட்ட அறிக்கையில் பாதிப்படைந்த யூனிட்களின் எண்ணிக்கையில் ஆக்செஸ் 125 மாடல் 2,63,788, அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் எண்ணிக்கை 52,578 மற்றும் பர்க்மேன் 125 மாடல் 72,025 பட்டியலிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் தங்கள் அருகிலுள்ள சர்வீஸ் மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
இதுமட்டுமல்ல சர்வதேச அளவில் சுசூகி மே 5, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரை தயாரிக்கப்பட்ட V-STROM 800DE மாடலில் பின்புற டயரில் ஏற்பட்டுள்ள வெடிப்பு பிரச்சனைக்காக இந்திய அளவில் 67 யூனிட்டுகளை திரும்ப அழைத்துள்ளது.