EMPS 2024 மானியத்தை செப்டம்பர் 2024 வரை நீட்டித்த கனரக தொழில்துறை

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற Electric Mobility Promotion Scheme 2024 (EMPS 2024) மானியம் மேலும் இரண்டு மாதங்களுக்கு அதாவது செப்டம்பர் 30, 2024 வரை நீட்டித்து இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முன்பாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மானிய திட்டமானது நான்கு மாதங்களுக்கு மட்டும் இடைக்காலமாக ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இதற்கு 778 கோடி ரூபாய் இந்திய அரசால் ஒதுக்கப்பட்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு மானியம் ரூ. 5,000 ஆக உள்ளது, எனவே, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை மட்டுமே பலன் கிடைக்கின்றது

ஜூலை 31, 2024 வரை நிறைவடைய உள்ள திட்டத்தை தற்பொழுது செப்டம்பர் 30,2024 இரண்டு மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த சலுகை மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.