அடுத்த வருடத்தில் உந்நாட்டு மருந்து உற்பத்தியை 90 வீதமாக அதிகரிக்க முடியும் என்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
1963 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தனது 61 ஆவது ஆண்டு நிறைவை (25) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில் கொண்டாடியது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன ..
பேராசிரியர் சேனக பிபிலே அவர்களினால் கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட உள்ளூர் மருந்து உற்பத்தி தற்போது தொழிற்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவதாகவும், அடுத்த வருடத்தில் உள்ளுர் மருந்து உற்பத்தியை 90% அதிகரிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் 200 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்து 25 வீதமான உள்ளூர் சந்தையை உள்ளடக்கி வருவது ஒரு பெரிய சாதனை என்றும், வருடா வருடம் மருந்து துறையில் பல சாதனைகளை படைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறைக்கு பேராசிரியர் சேனக பிபிலே பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், நம்பிக்கையை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும், உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை மீண்டும் அரசாங்கத்திடம் கொள்வனவு செய்யும் முறையை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.