புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநிலங்களுடன் ஆலோசிக்கப்படுகிறது. 2047- க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி, மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.