போபால்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட். இவரது சகோதரர் ராகேஷ். இருவரும் கிருஷ்ண கல்யாண்பூரில் உள்ள சுரங்கத்தைகுத்தகைக்கு எடுத்து வைரம்தோண்டும் பணியில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்க சுரங்கத்தில் பணியாற்றியபோது தினஊதியமாக ரூ.800 பெற்றனர்.
இந்நிலையில் வைரச் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது பாறைக்குள் ஜொலிக்கும் கல் ஒன்றை ராஜு கோண்ட் பார்த்தார். அதை நேர்த்தியாக வெட்டி எடுத் தார். அந்த ஜொலிக்கும் கல்லை ஆய்வு செய்தபோது அது 19.22 காரட் வைரம் என தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.80 லட்சம்.
அரசு உரிமைத்தொகை 11.5 சதவீதம் போக மீதத் தொகைசுரங்கம் தோண்டிய ராஜூகோண்ட்டுக்கு கிடைக்கும்.
இதுகுறித்து ராஜூ கூறுகையில், ‘‘பாறையை தோண்டும் போது, கண்கொள்ளாக் காட்சியாக ஜொலித்த வைரத்தை கண்டுபிடித்தேன்’’ என்றார்