Royal Challengers Bangalore News : ஐபிஎல் 2025 தொடருக்கான பணிகள் எல்லாம் பத்து அணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இம்முறை மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் ரீட்டெயின் செய்யப்போகும் மூன்று பிளேயர்களின் பட்டியலை தயார் செய்துவிட்டன. மற்ற பிளேயர்கள் எல்லாம் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லாத ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இம்முறை தங்களின் அணிகளை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கின்றன. அதனால், ஏற்கனவே அந்த அணியில் இருக்கும் ஸ்டார் பிளேயர்கள் எல்லாம் இம்முறை ஏலத்துக்கு வரப்போகிறார்கள்.
ஆர்சிபி அணி எடுத்த முடிவு
டுப்ளெசிஸ், வில் ஜாக்ஸ், விராட் கோலி ஆகியோர் ஆர்சிபி அணியால் ரீட்டெயின் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதநேரத்தில் விராட் கோலி ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், அவரின் சொந்த மாநில அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இம்முறை செல்வார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆர்சிபி அணியிடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தாலும், அது உண்மையில்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்சிபி அணி விடுவிக்கும் பிளேயர்கள்
அதேநேரத்தில் முகமது சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோர் இம்முறை கண்டிப்பாக ஐபிஎல் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இவர்களை தக்க வைப்பதற்கான ஆப்சன் ஆர்பிசி அணியிடம் இல்லை என்பதால், மேக்ஸ்எல், முகமது சிராஜ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் இப்போதே கணக்கு போட தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி அணியும் மற்ற அணிகளில் இருந்து ஏலத்துக்கு வரும் ஸ்டார் பிளேயர்களின் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறது. அவர்கள் ஏலத்துக்கு வந்தால் எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறது. இப்போதைக்கு கேஎல் ராகுல் ஆர்சிபி அணிக்கு வருவது கிட்டதட்ட உறுதியாகியிருக்கிறது.
ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதியை இறுதி செய்ய ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. இதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு ஐபிஎல் 2025 நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.