பேட்மிண்டனில் வெற்றி!
பேட்மிண்டன் தனிநபர் பிரிவின் க்ரூப் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய் ஜெர்மனி வீரர் ஃபேபியனுக்கு எதிரான போட்டியில் 21-18, 21-12 என நேர் செட் கணக்கில் வெற்றி.
டேபிள் டென்னிஸில் அசத்தல்!
மகளிர் தனிநபர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா பிரிட்டன் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி ரவுண்ட் ஆப் 32 க்கு முன்னேறினார்.
குத்துச்சண்டையில் வெற்றி!
குத்துச்சண்டையில் 50 கிலோ எடைப்பிரிவில் ஜெர்மனி வீராங்கனையை 5-0 என வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 க்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை நிக்கத் ஷரின்.
வில்வித்தையில் ஏமாற்றம்!
வில்வித்தையில் பெண்களுக்கான அணிகள் பிரிவின் காலிறுதியில் அங்கிதா, பஜன் கௌர், தீபிகா குமாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 6-0 என தோல்வி.
சரத் கமல் அதிர்ச்சி தோல்வி!
வில்வித்தையில் பெண்களுக்கான அணிகள் பிரிவின் காலிறுதியில் அங்கிதா, பஜன் கௌர், தீபிகா குமாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 6-0 என தோல்வி.
இந்தியாவின் மூத்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் தனிநபர் பிரிவில் ஸ்லோவேனியா நாட்டு வீரருக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 சுற்றில் 2-4 என அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மனு பாக்கர் நெகிழ்ச்சி!
டோக்கியோ ஒலிம்பிக்ஸூக்கு பிறகு நான் கடும் அதிருப்தியில் இருந்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு நிறைய காலம் பிடித்தது. ஒரு கட்டத்தில் நடந்தவையெல்லாம் நடந்தவையாகவே இருக்கட்டும். இனி வருங்காலத்தை கவனிப்போம் என முடிவெடுத்தேன். இந்தப் பதக்கம் ஒரு அணியாக கூட்டு உழைப்பின் மூலம் கிடைத்தது. பதக்கம் வெல்ல ஒரு காரணியாக இருந்ததில் மகிழ்ச்சி.
பெண் சக்தி!
கடந்த 3 ஒலிம்பிக்ஸ் தொடர்களிலும் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தது பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் – சாக்ஸி மாலிக் – மல்யுத்தம் (வெண்கலம்)
2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் – மீராபாய் சானு – பளுதூக்குதல் (வெள்ளி)
2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் – மனு பாக்கர் – துப்பக்கிச்சுடுதல் (வெண்கலம்)
வரலாறு படைத்த மனு பாக்கெர்!
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா வெல்லும் 5 வது பதக்கம் இது.
மற்ற நான்கு பதக்கங்களும் வீரர்கள் வென்றது. மனு பாக்கர்தான் முதல் வீராங்கனையாக சாதித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 10 மீ ஏர் பிஸ்டலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
பதக்கத்தை நெருங்கும் மனு!
10 ஏர் பிஸ்டலின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் சிறப்பாக ஆடி 3 வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
பதக்கப் போட்டி தொடங்கியது!
பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டி தொடங்கியது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் இப்போது மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறார்.
வரலாறு படைக்கும் இந்திய வீராங்கனைகள்!
ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 20 வருடங்களுக்குப் பிறகு இந்தியா சார்பில் இறுதிப்போட்டியில் ஆடும் வீராங்கனைகள் எனும் பெருமையை மனு பாக்கர் மற்றும் ரமிதா ஜிந்தால் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.
நூலிழையில் தோற்ற தமிழ்நாட்டு வீராங்கனை!
10 மீ ஏர் ரைபிள் பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும். அப்படியிருக்க தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10 வது இடம்பிடித்திருந்தார். 8 வது இடம்பிடித்த பிரான்ஸ் வீராங்கனைக்கும் இளவேனிலுக்கும் 0.7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம்.
இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை!
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை ரமிதா சிறப்பாக ஆடி 631.5 புள்ளிகளோடு 5 ஆம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
பி.வி.சிந்துவுக்கு முதல் வெற்றி!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தனது முதல் போட்டியில் ஆடிய பி.வி.சிந்து மாலத்தீவு வீராங்கனை ரசாக்கை 21-6, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி!
ஆண்களுக்கான துடுப்புப்படகு போட்டியில் ரீப்பேஜ் சுற்றில் இரண்டாம் இடம்பிடித்து இந்திய வீரர் பன்வர் பால்ராஜ் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுவார்களா?
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாளறிவன், ரமிதா ஆகியோர் இப்போது ஆடி வருகின்றனர். 43 வீராங்கனைகள் பங்குகொண்டிருக்கும் இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதிப்பெறுவார்கள். இப்போதைய நிலவரப்படி இளவேனில் முதல் இடத்திலும் ரமிதா 8 ஆம் இடத்திலும் இருக்கின்றனர்.
பதக்கம் வெல்லுமா வில்வித்தை அணி?
தீபிகாகுமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் அடங்கிய இந்திய அணி பங்குபெறும் வில்வித்தை தொடரின் மகளிர் அணி காலிறுதிப் போட்டி இன்று மாலை 5.45 மணிக்கு தொடங்கும்.
பதக்கம் வெல்வாரா மனு பாக்கர்?
பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இன்று இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. தகுதிச்சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீராங்கனை மனு பாக்கர் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த பேட்மிண்ட வீராங்கனை பி.வி.சிந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று தனது முதல் போட்டியில் மாலத்தீவு வீராங்கனை பாத்திமாத்தை எதிர்த்து ஆடிக்கொண்டிருக்கிறார்.
இரண்டாம் நாள் போட்டிகள் யார், யாருக்கு?
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் இரண்டாம் நாளான இன்று இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை…