இருசக்கர வாகனங்கள் மிகவும் சுலபமாக கையாளக்கூடியவை, சிக்கனமானவை என்பதால், கார்கள் வைத்திருப்பவர்கள்கூட, இருசக்கர வாகனங்களையும் வைத்திருப்பது இயல்பான ஒன்று. என்ன இருந்தாலும், இருசக்கர வாகனத்தைப் போல நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுவதில்லை என்றே பலர் சொல்கின்றனர். அதற்கு காரணம், இருசக்கர வாகனங்கள் சிறந்த மைலேஜை வழங்குகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பைக் அல்லது காரை பயன்படுத்துவது நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு செலவை அதிகரிக்கிறது. அதில் சில பைக்குகள் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. குறைவான செலவில் பயணிக்க உதவும் இரு சக்கர வாகனங்களில், இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பது பைக்குகள். பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் இவை. நூறு ரூபாய் என்ற மலிவான விலையில் 80 கிலோ மீட்டர் வரையிலான தொலைவு செல்ல இந்த பைக்குகள் உதவும்.
ஹோண்டா ஷைன் 100 ( Honda Shine 100)
98.98 cc இன்ஜின் கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 7.38 PS பவரையும், 8.05 Nm டார்க்கையும் வழங்குகிறது. இந்த பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் தரும்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ரூ.76,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இது ஒரு லிட்டருக்கு 80 கிமீ மைலேஜை வழங்குகிறது, நடுத்தர வர்க்கத்தினருக்கு சிக்கனமான தேர்வான இந்த பைக்கில் 8.02 பிஎஸ் பவர், 8.05 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 97 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி
உலகின் முதல் CNG பைக், Bajaj Freedom 125 CNG, இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. 95,000 ரூபாய் முதல் இதன் விலை தொடங்குகிறது. 125 சிசி எஞ்சின் கொண்ட பஜாஜ் ஃப்ரீடம், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 130 கிமீ மைலேஜையும், பெட்ரோலை பயன்படுத்தும்போது லிட்டருக்கு 67 கிமீ மைலேஜையும் வழங்குகிறது.
பஜாஜ் பிளாட்டினா
102 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பஜாஜ் பிளாட்டினா பைக், 7.79 பிஎச்பி பவரையும், 8.34 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. லிட்டருக்கு 72 கி.மீ மைலேஜ் கொடுக்கும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.61,000 (எக்ஸ்-ஷோரூம்). மாடலுக்கு ஏற்றாற்போல விலையில் சிறிதளவு மாறுபாடு இருக்கும்.
டிவிஎஸ் ஸ்போர்ட்
109 சிசி இன்ஜினைக் கொண்டுள்ள டிவிஎஸ் ஸ்போர்ட், 8.07 பிஎஸ் ஆற்றலையும் 8.4 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ் தரும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59,881 முதல் ரூ.71,000 வரை மாடலுக்கு ஏற்றாற்போல மாறுபடும்.