5 டோர் பெற்ற மாடலாக வரவுள்ள தார் ராக்ஸ் ஆஃப் ரோடு எஸ்யூவி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் மற்றொரு டீசரை மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திராவின் தார் 3 டோர் மாடலில் இருந்து பெறப்பட்ட அடிப்படையான டிசைனில் ராக்ஸ் மாடலுக்கான நவீனத்துவமான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் ராக்ஸ்
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனையும் பெறவுள்ள ரியர் வீல் டிரைவ் மாடல்களுக்கு 1.5 லிட்டர் டீசல் என்ஜின், ஆல் வீல் டிரைவ் வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது.
6 ஏர்பேக்குகள் உட்பட Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு கொண்டிருக்கலாம். கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி லைட்டுகள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் மாறுபட்ட டிசைன் பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கின்றது.
5 இருக்கைகளை மட்டும் பெற உள்ள Roxx மாடலின் கிரில் 3 டோரில் உள்ள 7 ஸ்லாட் கிரிலுக்கு மாற்றாக, புதிய இரட்டை பிரிவினை கொண்டு ஆறு ஸ்லாட் வடிவமைப்பைப் பெறுகிறது. வட்ட வடிவ ஹெட்லேம்ப் ஆனது எல்இடி புரொஜெக்டர் விளக்குடன் புதிய C-வடிவ ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.
This News புதிதாக 5 டோர் தார் ROXX டீசரை வெளியிட்ட மஹிந்திரா appeared first on Automobile Tamilan.