ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் எலக்ட்ரிக் பைக் தொடர்பாக புதிய டீசரை வெளியிட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசரில் பைக்கின் தோற்ற அமைப்பு மற்றும் எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் பெரும் போன்ற எந்த ஒரு விபரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மட்டுமே இந்நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Ola E-bike launch soon
ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட நான்கு கான்செப்ட் மாடல்களின் அடிப்படையில் வருமா அல்லது கம்யூட்டர் செக்மெண்ட் எனப்படுகின்ற தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக அமையுமா என்பதெல்லாம் தற்பொழுது தெரிய வரவில்லை இவை அனைத்தும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அனேகமாக அறிமுகம் செய்யப்பட்டால் இந்த இ-பைக் குறித்தான முழுமையான விபரங்கள் வெளியாகலாம்.
துவக்க நிலை பைக் சந்தையில் ஏற்கனவே ரிவோல்ட், ஓபென் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது மற்றபடி பிரிமியம் சந்திக்க ஏற்ற மாடல்களாக அல்ட்ராவைலெட், மேட்டர் போன்ற நிறுவனங்கள் உள்ளன.
வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் பொதுப்பங்கு வெளியிட்டிற்கான ஓலா எலெக்ட்ரிக் பங்கு விற்பனை துவங்க உள்ளது. மேலும் இந்நிறுவனம் கார் தயாரிக்கும் திட்டத்தை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பாக செய்தி வெளியாகிருந்தது
This News புதிய டீசர்.. ஆகஸ்ட் 15ல் ஓலா எலெக்ட்ரிக் பைக் வருகையா.? appeared first on Automobile Tamilan.