ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிதாக மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்பொழுது உள்ள மாடல்களை விட மிகக் குறைவான விலையில் ரூபாய் 50,000 முதல் ரூபாய் 60,000 விலைக்குள் விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஏற்கனவே சந்தையில் போலா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் அதாவது ரூபாய் 75 ஆயிரம் ஆரம்ப விலையில் S1X வரிசை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.
Affordable Ola escooter
S1X மாடலை விட மிக குறைவான விலையில் வரவுள்ள இந்த மாடலானது அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். அதாவது குறைவான பயண தொலைவு கொண்ட நகர்ப்புற பயன்பாடு அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் மட்டும் பயணிப்பவர்களுக்கு ஏற்ற வகையிலான மாடலாக அமைந்திருக்கலாம். அனேகமாக இதில் 2Kwh பேட்டரிக்கும் குறைவான பேட்டரியை பெற்று இருக்க வாய்ப்புள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சொந்தமாக தயாரித்து வருகின்ற 4680 லித்தியம் அயன் பேட்டரி செல்களை புதிய குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உள்நாட்டிலே இந்த பேட்டரி காண சிலைகள் தயாரிக்கப்படுவதனால் விலை மலிவாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
ஓலா நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்திய நான்கு எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அல்லாமல் புதிதாக கம்யூட்டர் செக்மென்டில் அதாவது ஆரம்ப நிலை சந்தைக்கு ஏற்ற மூன்று எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை அடுத்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றது.
புதிய குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்பட 3 எலக்ட்ரிக் பைக் தொடர்பான முக்கிய விபரங்களை வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்நிறுவனம் வெளியிட உள்ளது.
மேலும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் பொதுப்பங்கு வெளியிட தயாராகி உள்ளதால் வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் ஐபிஓ பங்குகளுக்கான வெளியீடு தொடங்குகின்றது. எனவே பல்வேறு செயல்திட்டங்களை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
This News ரூ.50,000 விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட தயாராகும் ஓலா appeared first on Automobile Tamilan.