இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் இன்று, தமிழ்நாட்டில் கூடுதலாக 2.5 மில்லியன் புதிய வீடுகளுக்கு வைஃபை சேவையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. பரமக்குடி, குன்னூர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 38 மாவட்டங்களில் வைஃபை சேவையை விரிவுபடுத்துகிறது. ஸ்டார் விஜய், சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட முன்னணி தமிழ் OTT மற்றும் டிவி சேனல்களின் முழு தொகுப்பையும் வழங்குகிறது.
ஏர்டெல் வைஃபை மூலம், ஒரு வாடிக்கையாளர் அதிவேக நம்பகமான வயர்லெஸ் இணையச் சேவையைப் பெறுவது மட்டுமல்லாமல், வரம்பற்ற ஸ்ட்ரீமிங், 20+ OTT சேவைகள் மற்றும் 350+ டிவி சேனல்களுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுகிறார். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ஆர்டர் செய்து அல்லது 8130181301 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வைஃபையை முன்பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு, பார்தி ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி தருண் விர்மானி இது குறித்து கூறுகையில் , “ஏர்டெல் வைஃபை இப்போது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏர்டெல் வைஃபை மூலம், வாடிக்கையாளர்கள் 20+ OTTகள், 350+ தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நம்பகமான அதிவேக வயர்லெஸ் வைஃபை சேவைக்கான அணுகல் உட்பட பல்வேறு வகையான பொழுதுபோக்கு அமசங்களை அனுபவித்து மகிழலாம். மாதம் 699 சந்தாவுடன் தொடங்கும் பிளான்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் மற்றும் முடிவில்லாத பொழுதுபோக்கை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்கிறார்.
ஏர்டெல் பிளான்கள் விபரம்
1. ₹699 கட்டணத்தில் கிடைக்கும் பலன்கள்: 40 Mbps வரை வேகம், 350+ டிவி சேனல்கள் (HD சேர்க்கப்பட்டுள்ளது) Disney+ Hotstar, 20+ OTTகள் மற்றும் பல
2. ₹899 கட்டணத்தில் கிடைக்கும் பலன்கள்: 100 Mbps வரை வேகம், 350+ டிவி சேனல்கள் (HD சேர்க்கப்பட்டுள்ளது) Disney+ Hotstar, 20+ OTTகள் மற்றும் பல
3. ₹1099 கட்டணத்தில் கிடைக்கும் பலன்கள்: 200 Mbps வரை வேகம், 350+ டிவி சேனல்கள் (HD சேர்க்கப்பட்டுள்ளது) Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTகள் மற்றும் பல
4. ₹1599 கட்டணத்தில் கிடைக்கும் பலன்கள்: 300 Mbps வரை வேகம், 350+ டிவி சேனல்கள் (HD சேர்க்கப்பட்டுள்ளது) Netflix, Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTகள் மற்றும் பல
5. ₹3999 கட்டணத்தில் கிடைக்கும் பலன்கள்: 1 ஜிபிபிஎஸ் வரை வேகம், 350+ டிவி சேனல்கள் (HD சேர்க்கப்பட்டுள்ளது) Netflix, Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTகள் மற்றும் பல
தமிழ்நாட்டிலுள்ள வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய் (Star Vijay), சன் டிவி (Sun TV), கலைஞர் டிவி (Kalaignar TV), விஜய் டிவி (Vijay TV), ஜீ தமிழ் (Zee Tamil), பாலிமர் டிவி (Polimer TV), புதுயுகம் டிவி (Puthuyugam TV) மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தமிழ்) Disney+ Hotstar Tamil, SonyLIV தமிழ், Zee5 போன்ற பிரபலமான OTT தளங்கள் உள்ளிட்ட சில முன்னணி தமிழ் OTT இயங்குதளங்கள் மற்றும் சேனல்களுக்கு வரம்பற்ற அணுகலை அனுபவிக்க முடியும்.
இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஏர்டெல், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 17 நாடுகளில் 550 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகளாவிய தகவல்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனம். ஏர்டெல் நிறுவனம் உலகளவில் முதல் மூன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. அதன் நெட்வொர்க் சேவையைஇரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏர்டெல் இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவன என்பதோடு, ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய மொபைல் ஆபரேட்டர் நிறுவனம்.
ஏர்டெல்லின் ரீடெய்ல் போர்ட்ஃபோலியோவில் அதிவேக 4G/4.5G மொபைல் பிராட்பேண்ட், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகியவை 1 ஜிபிபிஎஸ் வரை வேகத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப பொழுதுபோக்கு, இசை மற்றும் வீடியோ, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகள், ஸ்ட்ரீமிங் சேவைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகிறது. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, பாதுகாப்பான இணைப்பு, கிளவுட் மற்றும் டேட்டா சென்டர் சேவைகள், சைபர் செக்யூரிட்டி, ஐஓடி, ஆட் டெக் மற்றும் கிளவுட் அடிப்படையிலான தகவல் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பல சேவைகளை ஏர்டெல் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு www.airtel.com என்ற இணையதளத்தை பார்க்கவும்