Oppo K12x 5G: இந்தியாவில் Oppo K12x 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கே-சீரிஸின் முதல் சாதனம் இது. Vivo, Realme மற்றும் Lava போன்ற பிராண்டுகளுக்கு போட்டி கொடுக்கும் ஓப்போ ஸ்மார்ட்போனில் 50எம்பி கேமரா உள்ளது. அதோடு, HD டிஸ்ப்ளே மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் பேட்டரி உள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Oppo போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் Oppo K12x 5G விலை
Oppo K12x 5G இரண்டு ரேம் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாறுபாட்டின் விலை ரூ.12,999. இதன் 8ஜிபி + 256ஜிபி சேமிப்பு மாடலை ரூ.15,999க்கு வாங்கலாம். இந்த சாதனத்தின் விற்பனை ஆகஸ்ட் 2 முதல் Flipkart ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் தொடங்கும், ப்ரீஸ் ப்ளூ மற்றும் மிட்நைட் வயலட் வண்ண விருப்பங்களில் ஸ்மார்போனை (Smartphone) வாங்கலாம்.
Oppo K12x 5G ஸ்மார்ட்போனில் முக்கிய அம்சங்கள் (Oppo K12x 5G Specifications)
Oppo K12X 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஆபரேடிங் சிஸ்டத்தில் வேலை செய்கிறது. உடல் 360 டிகிரி டேமேஜ் ப்ரூஃப் அம்சம் கொண்டது. அதாவது கீழே விழுந்தாலும் போன் சேதமடையாது. இதன் தடிமன் 7.68 மிமீ மற்றும் எடை 186 கிராம். 6.67 இன்ச் HD பிளாட் டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் புதுப்பிப்பு விகிதம் 120Hz ஆகும். இந்த கைபேசியில், பாதுகாப்புக்காக கைரேகை சென்சார் மற்றும் முகத்தை கொண்டு திறக்கும் வசதி உள்ளது.