மகளிர் தனிநபர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா பிரான்ஸ் வீராங்கனையை 4-0 என வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறினார்.
பேட்மிண்டனில் காலிறுதிக்கு தகுதி!
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை காலிறுதிக்கு தகுதி.
பேட்மிண்டனில் வெற்றி!
பேட்மிண்டன் க்ரூப் சுற்றில் இந்திய லக்ஷ்யா சென் பெல்ஜியம் வீரர் கராக்கிக்கு எதிராக 21-19, 21-14 என நேர் செட் கணக்கில் வெற்றி.
வில்வித்தையில் தோல்வி!
வில்வித்தை அணிகள் பிரிவின் காலிறுதியில் இந்திய அணி 2-6 என துருக்கி அணிக்கு எதிராக தோல்வியடைந்திருக்கிறது.
போராடி டிரா செய்த இந்தியா!
ஹாக்கியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியை இந்திய அணி போராடி 1-1 என டிரா செய்திருக்கிறது. கடைசி 1:45 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே இந்தியா ஒரு கோலை அடித்தது.
சமநிலையில் ஹாக்கி போட்டி!
அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டி முடிவதற்கு இன்னும் 1:45 நிமிடங்களே இருக்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோல் அடித்து 1-1 என போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
தோல்வியை தவிர்க்குமா இந்தியா?
ஹாக்கியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 0-1 என தொடர்ந்து பின்னடைவு. நான்காவது கால்பகுதி போட்டி இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
ஹாக்கியில் இந்தியா பின்னடைவு!
அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியின் இரண்டாவது காலிறுதி பகுதி நடந்துகொண்டிருக்கிறது. இந்தியா 0-1 என பின்னடைவு.
நெருங்கி வந்து தோற்ற அர்ஜூன் பபுதா!
10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டு நான்காவது இடம்பிடித்தார்.
சவாலளிக்கும் இந்திய வீரர்!
10 மீ ஏர் ரைபிள் இறுதிப்போட்டி தொடங்கியது. இப்போதைய நிலவரப்படி இந்திய வீரர் அர்ஜூன் பபுதா மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
இறுதிப்போட்டி இன்னும் சில நிமிடங்களில்…
10 மீ ஏர் ரைபிளில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா இன்னும் சில நிமிடங்களில் களமிறங்கவிருக்கிறார்.
துப்பாக்கிச்சுடுதல் ட்ராப் பிரிவு தகுதிச்சுற்று!
துப்பாக்கிச்சுடுதலின் ட்ராப் பிரிவு தகுதிச்சுற்றில் இந்திய வீரர் பிரித்திவிராஜ் இப்போது ஆடி வருகிறார்.
மற்றொரு பதக்கம் கிடைக்குமா?
கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்- சரப்ஜோத் இணை தகுதிச்சுற்றில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நாளை நடைபெறவுள்ளது!
வெளியேறிய ரமிதா!
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரமிதா ஜிந்தல் 7-வது இடம் பிடித்து வெளியேறினார். இதன்மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்!