தனியார் போக்குவரத்து வாகன இறக்குமதி தொடர்பாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும் என நிதி இராஜாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார்.
அக்டோபர் மாதம் ஆகும்போது பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து வாகனங்கள் இறக்குமதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அவசியமான அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக எதிர்கால பாதை திட்டம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு இணங்க கொடுப்பனவுக் கணக்கின் மீதி, வெளிநாட்டு செலாவணி மீது செல்வாக்கு செலுத்தாதவாறு இறக்குமதி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் விவரித்தார்.