காலநிலை மாற்றத்திற்கு சுற்றுசூழல் மாசும் முக்கியமான காரணம் என்பதால், அதனை எதிர்கொள்ளும் விதத்தில் வாகன எரிபொருளாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து நாடுகளும் மக்களை ஊக்குவித்துவருகின்றன.
பல்வேறு சலுகைகள், தள்ளுபடி என மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்க ஊக்கம் அளித்து வந்தாலும், மக்களிடையே மின்சார வாகனங்கள் வாங்குவதில் தயக்கம் இருந்து வந்த நிலையில், மக்களின் தயக்கம் இன்னும் மாறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மின்சார வாகனங்களை வாங்க தயங்குவது இந்தியர்கள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகள் அனைத்திலும் மின்சார வாகனங்களை வாங்குவதற்கான விருப்பங்கள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று பட்டவர்த்தனமாக வெளிபப்டுதியுள்ளது.
அதற்கான காரணங்கள், மின்சார வாகனத்திற்கான முன் செலவுகள், சார்ஜிங் உள்கட்டமைப்புகள் பற்றாக்குறை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே (ஜனவரி 2024) ரிவியன் மற்றும் லூசிட் போன்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் 85 சதவிகிதம் சரிந்ததை அடுத்து, டெஸ்லா உட்பட பல நிறுவனங்களும் நம்ப முடியாத அளவு தள்ளுபடி மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கத் தொடங்கின. இதற்குப் பிறகும் மின்சார வாகனம் வாங்கும் விருப்பம் மக்களிடையே அதிகரிக்கவில்லை என்பதை அண்மை ஆய்வு நிரூபிக்கிறது.
McKinsey ஆய்வு
அண்மையில் McKinsey மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின்படி, பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களுக்கு திரும்ப விரும்பும் மின்சார வாகன உரிமையாளர்களின் உலகளாவிய சராசரி சுமார் 29 சதவீதம் என்றால், அமெரிக்காவில் இந்த விருப்பம் 46 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் தான் மின்சார கார்களை மறுதலிக்கும் எண்ணம் என்றும், இந்தியாவில் குறைவு என்றும் எண்ண வேண்டாம். இந்தியாவில் இப்போதுதான் வேகமெடுத்துவரும் மின்சார வாகன சந்தையில் நான்கு சக்கர வாகனப் பிரிவைப் பற்றி மட்டுமே நாம் பார்க்கிறோம்.
பார்க்+ கணக்கெடுப்பு
500 மின்சார உரிமையாளர்களிடம் கேட்டபோது, வடிவமைப்பு, ஆயுள், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய சந்தையில் Tata Nexon மற்றும் Punch ஆகியவற்றுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்கிறது. இருந்தபோதிலும், மின்சார வாகனங்கள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட தகவல்களே அதிகமாக இருப்பதாகவும், சந்தைபடுத்தும் உத்தி மின்சார வாகனத்தில் மிக அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது உங்களை ஆச்சரியப்படுத்தும், ஆனால் அதனால் அவர்கள் மனதில் சந்தேகம் இல்லை. பெரும் தடையாக தொடர்ந்து கவலையை சுமத்துகிறது. மின்சார சார்ஜிங் உள்கட்டமைப்பு (Electric Vehicle Charging Stationஅதிகரிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இது நிச்சயமாக உள்ளது, ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன் செயல்படுகிறதா அல்லது கிடைக்குமா என்ற கவலை அதிகமாக உள்ளது.
அதேபோல, தங்களுடைய கார்களை வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ சார்ஜ் செய்கிறார்கள், போன் சார்ஜரை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது போன்ற சார்ஜிங் சுதந்திரம் இல்லாதது மின்சார கார்கள் வாங்குவது தொடர்பான எண்ணத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.
Park+ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 88 சதவீத அளவிலான மின்சார கார் உரிமையாளர்கள், மின்சார சார்ஜிங் நிலையங்கள் தொடர்பான கவலையை தெரிவிக்கின்றனர். சார்ஜிங் நிலையங்கள் எங்கே இருக்கிறது என்பது தெளிவாக இல்லாததால், சார்ஜிங் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளது. சார்ஜிங் தொடர்பான கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டாலும், பெட்ரோல் பங்குகள் போல மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் எங்கு அமைந்திருக்கிறது என்பது தெரிவதில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
அதேபோல, கார் வைத்திருக்கும் பலர், வெளியூருக்கு செல்வதைவிட, தங்களுடைய தேவைகளுக்காக குறைந்த தொலைவு (சராசரியாக 50 கிமீ தூரம்) என்ற அளவில் தங்களுடைய நகரம் மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதால், கார் வைத்திருப்பவர்கள் மைலேஜ் பற்றி பெரிய அளவில் கவலைப்படுவதில்லை.
இரண்டாவது மின்சார கார்
அதேபோல, ஏற்கனவே மின்சார கார் வாங்கியவர்கள், தங்கள் அனுபவத்தின் அடிப்படையில், அடுத்த கார் வாங்க திட்டமிட்டால், அது மின்சார வாகனமாக இருப்பதில்லை என்பது முக்கியமான கருத்தாக, ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. இதற்கு அடிப்படை சார்ஜிங் தொடர்பான பிரச்சனையே என்றும் அறிக்கை கூறுகிறது. பார்க்+ அறிக்கையின்படி, தற்போதுள்ள EV உரிமையாளர்களில் 51 சதவீதம் பேர் மற்றொரு மின்சார வாகனத்தை வாங்கத் திட்டமிடவில்லை.
மறுவிற்பனை மதிப்பு
ஏற்கனவே மின்சார கார் வைத்திருப்பவர்களில் மூன்றில் ஒருவர், தங்கள் மின்சார வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பு தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். தரப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் சோதனைகள் இல்லாததால் தற்போது மின்சார வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது.
McKinsey கணக்கெடுப்பின்படி, அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்களை (EV) வாங்குவதில் தயக்கம் அதிகரிப்பது என்பது, சென்ற ஆண்டு 41 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 48 சதவீதமாக அதிகரித்துள்ளது.