வயநாடு நிலச்சரிவு: 12 உடல்கள் மீட்பு, சிகிச்சையில் 33 பேர் – 400க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. பல மாவட்டங்களில் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என மாறி மாறி அறிவிக்கப்பட்டுவந்தன. மேலும், ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவ்வப்போது உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையில் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் உருள்பொட்டல் என அழைக்கப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், அதிகாலை 4.10 மணியளவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சூரல்மல முண்டக்கை பகுதிகளை இணைக்கும் பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை நிலச்சரிவில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட பகுதியை சென்றடைவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.

வயநாட்டில் ஏற்பட்டுள்ள உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு

பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 12 பேர் மரணம் அடைந்ததாகவும், அதில் 8 பேர் சூரல் மலையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. 12 பேர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் வெளிநாட்டைச்சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 33 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மேப்பாடி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முண்டகை பகுதியில் மட்டும் சுமார் 400 பேர் வெளியேற முடியாமல் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ள பிரளயத்தை விட மோசமான நிகழ்வாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட தேவைகளுக்கு 8086010833, 9656938689 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம். மேப்பாடி, கல்ப்பற்றா, மானந்தவாடி உள்ளிட்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன” என்றார். மேலும், சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 8075401745 என்ற எண்ணும், மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 9995220557, 9037277026 மற்றும் 9447732827 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு அனைத்து மீட்ப்புப்பணிகளும் செயல்படுத்தப்படும்.

வயநாடு நிலச்சரிவு

துயர சம்பவத்தை அறிந்ததும் அரசு மீட்புப்பணிகளில் இறங்கியுள்ளது. அமைச்சர்கள் தலைமையில் மீட்புப்பணிகள் நடைபெறும். கண்ணூர் டிஃபன்ஸ் செக்யூரிட்டி கோர்ப்பஸின் 2 டீம்கள் உடனடியாக வயநாட்டை சென்றடையும். விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் அங்கு செல்கின்றன. தீயணைப்புத்துறை மற்றும் உள்ளூர் மீட்புக்குழுவினர் என 250 பேர் மீட்புப்பணியில் உள்ளனர். மேலும் மீட்புப்படையினர் அங்கு செல்ல உள்ளனர்” என்றார். இதற்கிடையே வயநாட்டுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என சமூக வலைத்தளங்கள் ஹேஸ்டேக் பகிரப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.