Paris Olympics: இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம்… வெண்கலம் வென்ற மனு பாக்கர் – சரப்ஜோத் சிங்!

Paris Olympics 2024, India Medal Tally: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டி வரும் ஆக. 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 117 வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். 

2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 124 வீரர்கள் பங்கேற்று மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றது. அதிலும் கடந்த முறை தடகள பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். 

இந்தியா மீதான எதிர்பார்ப்பு

இதனால், இந்த ஒலிம்பிக்கிலும் இந்திய குழுவின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த முறை போல் இம்முறையும் நீரஜ் சோப்ரா நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மட்டுமின்றி கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளூ தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு (வெள்ளி), பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து (வெண்கலம்),  குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்ஹோகைன் (வெண்கலம்) உள்ளிட்டோர் இந்த முறையும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கடந்த முறை வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி இம்முறையும் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி துப்பாக்கிச் சுடுதலின் இளம் வீராங்கனை ஷிப்ட் கௌர் சர்மா மீதும் பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார்.  2008ஆம் ஆண்டுக்கு பின் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா வென்ற முதல் பதக்கம் அதுதான். மேலும், துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றிருந்தார். 

இந்தியா vs கொரியா மோதல்

இந்த சூழலில், இன்று ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச்சுடுதலில் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை ((Manu Bhaker – Sarabjot Singh)) போட்டியிட்டது. இதில், வெண்கலத்திற்கான போட்டியில் கொரியாவின் வோன்ஹோ லீ மற்றும் ஜின் யே ஓ இணையை எதிர்கொண்டது.

இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம்

இதில் ஒவ்வொரு சுற்றிலும், ஒவ்வொருவரும் முறையை இலக்கை நோக்கி சுடுவார்கள். அந்த சுற்றில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டு ஸ்கோரை பெறுகிறதோ அந்த அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.  இதில், இந்த போட்டி 13ஆவது சுற்று வரை நீண்டது. இந்த 13 சுற்றுகளில் இந்தியா 8 சுற்றுகளை வென்று அசத்தியது. கொரியா 5 சுற்றுகளை மட்டுமே வென்றது. அதாவது 16-10 என்ற புள்ளிக் கணக்கில் மனு பாக்கர் – சரப்ஜோட் சிங் ஜோடி வெண்கலத்தை வென்றது. இது நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் இரண்டாவது பதக்கம் ஆகும். 

Paris Olympics 2024 | Shooters Manu Bhaker and Sarabjot Singh win Bronze medal in 10m Air Pistol Mixed team event pic.twitter.com/FIbf0dTKDP

— ANI (@ANI) July 30, 2024

வரலாறு படைத்த மனு பாக்கர்

இரண்டும் துப்பாக்கிச்சூட்டின் மூலமே கிடைத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் 124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். 22 வயதான மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்கில் குவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.