தீரஜ் பொம்மதேவரா வெற்றி!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஆடவர் தனிநபர் வில்விதையில் 7-1 என்ற செட் புள்ளிகள் கணக்கில் செக்கியா வீரர் ஆடம் லீயை வீழ்த்தினார் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா. இதன்மூலம் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
‘இரட்டிப்பு’ மகிழ்ச்சியில் மனு பாக்கர்!
அமித் பங்கல் தோல்வி!
ஆண்கள் 51 கிலோ பிரிவு குத்துச்சண்டை போட்டியில் ஜாம்பியா வீரரிடம் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார் இந்திய வீரர் அமித் பங்கல்.
வில்வித்தையில் மீண்டும் வெற்றி!
மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் போலாந்து வீராங்கனையை 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதிக்கு தகுதி பெறுவார்.
மூன்றாவது போட்டியிலும் தோல்வி!
மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் ஆஸ்திரேலிய இணைக்கு எதிரான போட்டியில் 21-15, 21-10 என்ற நேர் செட்களில் தோல்வியை தழுவியது இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா க்ராஸ்டோ இணை. தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.
இந்திய இணை வெற்றி!
பேட்மிண்டனில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் – சிராஜ் செட்டி இணை இந்தோனேஷிய இணைய 21-13, 21-13 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி.
ஹாக்கியில் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான க்ரூப் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 2-0 என எளிதில் வெற்றி.
வில்வித்தையில் வெற்றி!
வில்வித்தையில் இந்திய வீராங்கனை பஜன் கௌர் இந்தோனேஷிய வீராங்கனையை 7-3 என வீழ்த்தி ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாக்கி போட்டி!
இந்திய ஹாக்கி அணி க்ரூப் சுற்றில் தனது மூன்றாவது போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது.
இந்திய வீரர் எலிமினேட்!
துடுப்புப்படகு போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வர் நான்காம் இடத்தைப் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
வரலாறு படைத்த மனு பாக்கர்!
கடந்த 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்களை வென்ற முதல் நபர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக, இந்திய தடுப்போட்ட வீரர் நார்மன் கில்பர்ட் பிரிட்சார்ட் 1900ஆம் ஆண்டு இதே பாரிஸ் நகரத்தில் நடந்த ஒலிம்பிக்ஸில் இரண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!
10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இணை மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் தென் கொரிய இணையை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.
தொடங்கியது இறுதிப்போட்டி!
10 மீ எர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி தொடங்கியது. இந்திய இணை மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் களத்தில் ஆடி வருகிறது.
இன்னும் சில நிமிடங்களில் இறுதிப்போட்டி!
10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இணை மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் ஆகியோர் தென் கொரிய இணையை இன்னும் சில நிமிடங்களில் எதிர்கொள்ளவிருக்கின்றனர்.
இன்றைய போட்டிகளின் அட்டவணை!
பதக்கப்பட்டியல் நிலவரம்!
மூன்றாம் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் 26-வது இடத்தில் இந்தியா!
வரலாறு படைப்பாரா மனு பாக்கர்?
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் இன்றைய தினத்தில் இந்தியா ஒரு பதக்கத்தை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இணை 10 மீ ஏர் பிஸ்டலின் கலப்பு இரட்டையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று ஆடவிருக்கின்றனர்.