ஒன்பது வளைவு பாலத்தை சுற்றியுள்ள பிரதேசத்தில் சுற்றுலா முகாமைத்தவ வேலைத்திட்டம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துர்ணர்வு ஒப்பந்தம் பிரதமர் தினேஷ் குனவர்தன தலைமையில் (29) பிரதமர் அலுவலகத்தில் கைச்சாத்தடப்பட்டது.
இலங்கையில் முதன்முறையாக தேசிய பாரம்பரிய தளத்துடன் இணைந்து ஆம்புலன்ஸ் சேவையொன்று இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்வேலைத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக தெம்மோதரை புகையிரத நிலையத்தை அண்டியதாக சுற்றுலா முகாமைத்துவ வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குனவர்தன…
சுற்றுலா கேந்திர நிலையங்களை இவ்வாறான வேலைத்திட்டங்களினூடாக அபிவிருத்தி செய்து சுற்றுலா துறையின் கவர்ச்சியை அதிகரிப்பதற்காக செயல்படுகின்றமை குறித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் பொறியியல் துறையில் இந்த வடிவமைப்புகள் பெரிதும் பாராட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, இயற்கைச் சூழலின் இருப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதோடு, வருங்கால சந்ததியினரின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
மத்திய கலாசர நிதியத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் காமினி ரணசிங்க, புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே, ஆகியோரும் இவ்ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்;.