கடந்த திங்கள் கிழமை தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்திலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டிருக்கிறது. அந்தப் பேருந்தில் 26 வயது பெண் ஒருவர் பயணித்திருக்கிறார். நள்ளிரவில் பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது இரு ஓட்டுநர்களில் ஒருவர், தனியாக ஸ்லீப்பரில் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் வாயில் போர்வையை திணித்து, பயணிகள் இருக்கும்போதே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், ஹைதராபாத் புறநகரில் பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது ‘100’க்கு அழைத்து, காவல்துறைக்குத் தெரிவித்தார்.
உடனே காவல்துறை பேருந்தை வழிமறித்து நிறுத்தியது. ஆனால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அந்த ஓட்டுநர், பேருந்து மெதுவாக சென்றுகொண்டிருக்கும்போது பாதியிலேயே இறங்கிவிட்டதாக தெரியவந்திருக்கிறது. இதற்கிடையில், காவல்துறை மற்றொரு ஓட்டுநரிடம் இது குறித்து விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், உஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. ஓடும் பேருந்தில், பயணிகள் இருக்கும்போதே, பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88