ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சம் வாடிக்கையாளர்களை வெற்றிகரமாக கடந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விற்பனையை செய்து வருகின்ற ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா முதல் பல்வேறு மாடல்களைக் கொண்டிருக்கின்றது குறிப்பாக தமிழ்நாட்டில் 547 இடங்களில் டீலர் பாயிண்ட்களை கொண்டிருக்கின்றது இதில் 19 பிரீமியம் பிக்விங் டீலர்களையும் கொண்டிருக்கின்றது.
இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் நாட்டின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கி வருகின்ற நிலையில் 125சிசி பைக் செக்மெண்டிலும் சிறப்பான வரவேற்பினை பெற்றிருக்கின்றது. இது தவிர பிரிமியம் மாடல்கள் 350சிசி பிரிவு மேலும் இந்நிறுவனம் ஆப்பிரிக்கா ட்வின், கோல்ட் விங் டூர் போன்ற பல்வேறு பிரிமியம் மாடல்களையும் விற்பனை செய்து வருகின்றது.
சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் திரு. யோகேஷ் மாத்தூர்,
“தமிழ்நாட்டில் 5 மில்லியன் இரு சக்கர வாகன விற்பனையை எட்டியது HMSI நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த மைல்கல் எங்கள் தயாரிப்புகள் மீதான எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் எங்கள் முழு குழுவின் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர் கூட்டாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்காக நாங்கள் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் எங்கள் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பான பயணத்தைத் தொடர உறுதிபூண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
This News தமிழ்நாட்டில் 50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா appeared first on Automobile Tamilan.