தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மா பதவியேற்கிறார்

ஐதராபாத்,

தெலுங்கானா கவர்னராக தற்போதைய பொறுப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக ஜிஷ்ணு தேவ் வர்மாவை ஜனதிபதி நியமித்துள்ளார். தெலுங்கானா உருவானதில் இருந்து 4வது கவர்னராக ஜிஷ்ணு இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராடே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா சட்டப் பேரவை தலைவர்கள் கதம் பிரசாத் குமார், குட்டா சுகேந்தர் ரெட்டி, மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதல்-மந்திரி பாட்டி விக்ரமார்கா, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று மாலை பதவியேற்கும் ஜிஷ்ணு பிற்பகல் திரிபுராவில் இருந்து ஷாம்ஷாபாத் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மந்திரிகள் டுட்டில்லா ஸ்ரீதர் பாபு, பொன்னம் பிரபாகர் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

ஆகஸ்டு 15, 1957 இல் பிறந்த ஜிஷ்ணு தேவ் வர்மா 1990இல் பாஜகவில் சேர்ந்தார் மற்றும் அயோத்தி ராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்றார். 2018 முதல் 2023 வரை, திரிபுரா துணை முதல்-மந்திரியாகவும், திரிபுரா பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.