தேங்காய் உற்பத்தியை தாக்கும் வெண் ஈக்கள் நோய் உள்ளிட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு உடனடி தொலைபேசி இலக்கமொன்றை வழங்குமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமர்வீர தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி, தென்னை உற்பத்தி தொடர்பான எந்த பிரச்சனைகளையும் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் எதிர்வரும் (ஓகஸ்ட்) 05ஆம் திகதி முதல் நேரடி தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்ய தென்னை பயிர்ச் செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 1916 என்ற இந்த நேரடி தொலைபேசி இலக்கம் ஊடாக விவசாயிகள் தமது முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.
இதனூடாக முறைப்பாடு செய்கின்ற எந்த பிரச்சனைக்கும் தேவையான பதில்களை வழங்குவதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர் என்று தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் பண்டுக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.