நியூசிலாந்தின் ஆக்லாந்து (Aukland) என்ற பகுதியைச் சேர்ந்த பெண்மணி, தன் செல்லப்பிராணியான நகி ( Nuggi ) எனும் நாயை வளர்த்து வந்தார். அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அப்பிராணி அதீத உடல் எடைக்கு சென்றது ( 53 கிலோ). மேலுல் அதை பெரிதாக நடமாட அனுமதிக்காததும் தெரிய வந்திருக்கிறது., 2021 ஆம் ஆண்டு SPCA என்னும் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்தப் பிராணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் ரத்த கசிவால் அந்த நாய் இறந்து போனது. அதற்கு அதீத உடல் எடையே காரணமாக கூறப்படுகிறது.
இதனால் மானுகா மாகாணத்தின் ( Manukau) நீதிமன்றம் பிராணியின் உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் 60,282 ரூபாய் அபராதமும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும் ஓராண்டு காலத்திற்கு நாய் வளர்க்கும் உரிமையையும் ரத்து செய்து உத்தரவு வெளியிட்டுள்ளது. இது குறித்து SPCA தலைவர் Todd westwood கூறுகையில், “துரதிஷ்டவசமாக குறைந்த எடையுடைய பிராணிகளே அதிக இன்னல்களுக்கு ஆளாகும். ஆனால் அதற்கு நிகராக அதிக எடை கொண்ட பிராணிகளும் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது .
அதன் உரிமையாளர்கள் சரியான முறையில் உணவு முறைகளையும் தினசரி உடற்பயிற்சிகளையும் செய்ய ஒத்துழைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது . நாங்கள் nuggi யை மீட்கும் பொழுது 10 அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை அந்த நாய்க்கு ஏற்பட்டிருந்தது. தன் உடல் எடையை தன் கால்களால் தாங்க இயலாத அளவிற்கு அதீத எடை கொண்டதாக இருந்தது. இது போன்ற வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றும் அவர் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88