பாண் விலையை குறைக்காத பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகவும், விலையை குறைக்காவிடின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை கொள்ளவுள்ளதாகவும்; வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.
அண்மையில் பேக்கரி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பாண் விலையை குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாண் விலையை 10.00 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அதன் பின்னரும் பாணின் விலையை குறைக்காவிடின், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இது குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் தலையிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அங்கு தொடரடந்தும் உரையாற்றிய அமைச்சர்..
உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அந்த சலுகைகள் நுகர்வோருக்கு கிடைக்காவிட்டால் அது குறித்து நுகர்வோர் அதிகாரசபை தலையிட்டும். சந்தையில் ஒரு இறாத்தல் பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும், அதற்கு மாறாக செயற்படும் பேக்கரி உற்பத்தியாளர்கள் மற்று பேக்கரி உரிமையாளர்களை சுற்றி வளைக்குகுமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.