வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தாம் நினைத்தபடி எல்லை மீறி பொருட்களின் விலை ஏற்றங்களை மேற்கொணடால் அரசாங்கம் தலையிடும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.
குறிப்பாக் பண்டிகைக் காலமொன்றை நெருங்கும்பொழுது முட்டைக்கான நுகர்வு அதிகரிக்கும். அவ்வேளையில் நுகர்வோருக்கு மலிவு விலையில் முட்டைகளை வழங்கும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில், சில பிரதேசங்களில் முட்டை ஒன்று 60-62 ரூபா வரை விற்பனை செய்யப்படட்டதை காணக்கூடியதாக இருந்தது என்று தெரிவித்த அமைச்சர், ஓகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ளுவுஊ நிறுவனம் ஊடாக தேவையான கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முட்டைகளை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.