ரியல்மீ முதல் போக்கோ வரை… ₹10,000-திற்கும் குறைவான விலையில் அசத்தல் போன்கள்..!!

Best Smartphones Under the Cost of Rs.10,000: செல்போன்கள் நம் வாழ்க்கையில், உணவு, உடைக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு அத்தியாவசிய பொருளாக ஆகி பல காலம் ஆகி விட்டது. தொலைதொடர்பு சாதன என்ற நிலை மாறி, ஸ்மார்ட்போன்கள் நம அனறாட வேலைகள் அனைத்திற்கும் தேவைப்படும் ஒரு பொருளாக ஆகி விட்டது. சந்தையில் சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் பல  ஸ்மார்ட்போன்கள் உள்ளன, விற்பனைக்கு. ஆனால், பலவற்றின் விலை மிக அதிகம். ஆனால், கவலை வேண்டாம்… உங்கள் பட்ஜெட் குறைவாக இருக்கும் நிலையில், நீங்கள் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், எந்த போன்களை வாங்குவது நல்ல தேர்வாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

போக்கோ எம்6 (POCO M6)

குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போனை (Smartphones) வாங்க நினைத்தால். போக்கோ எம்6 நல்ல தேர்வாக இருக்கும்.இந்த போன் செயல்திறனிலும் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த போன் 5ஜி இணைப்புடன் வருகிறது. அதாவது, உங்கள் பகுதியில் 5ஜி நெட்வொர்க் இருந்தால், அதிவேக இணையத்தைப் பயன்படுத்த முடியும். போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்ஷன் 6100 பிளஸ் செயலி கொண்டது. 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி திறன் கொண்டது. அமேசானில் அதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.9,249.

லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G)

இந்தியாவில் இயங்கி வரும் சர்வதேச எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல் லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அதிவேக இணையத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு லாவா பிளேஸ் 2 5ஜி ஒரு 5G ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருகும் 6.56 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 90Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. மேலும், மீடியாடெக் டிமன்சிட்டி 6020 ப்ராஸசர் கொண்டது. பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டது. 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி திறன் கொண்டது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வகை அமேசானில் ரூ.10,499க்கு கிடைக்கிறது.

மோட்டோ ஜி24 பவர் (Moto G24 Power)

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் இந்த பட்டியலில் மோட்டோ போன்கள் அதிக விரும்பி வாங்கப்படுபவை. மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன்  குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களை வழங்குகிறது. இது 6.56 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது, மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் வரும் இந்த போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டது. 6000mAh பேட்டரி திறன் கொண்டது.தவிர, மேலும் பல சிறப்பான அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அமேசானில் இதன் விலை ரூ.8,840.

ஐடெல் பி55 5ஜி (Itel P55 5G)

இந்த ஐடெல் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் வகையின் விலை ரூ.10,499. குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனைப் பெற இது சிறந்த தேர்வாக இருக்கும். 6.6″ அளவு, 90Hz டிஸ்ப்ளே கொண்ட இந்த போன், மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன்  5,000mAh பேட்டரி திறன் கொண்டது. 50MP இரட்டை பின்புற கேமராபோனின் முன் பேனலில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

ரியல்மி நர்ஸோ என்63 (Realme Narzo N63)

ரியல்மீ இன் இந்த போன் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் வருகிறது. இது 6.75 இன்ச் IPS LCD திரையை வழங்குகிறது, இது 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 560 nits உச்ச பிரகாசத்தை ஆதரிக்கிறது. இது 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. விலையைப் பற்றி பேசினால், அதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை அமேசானில் ரூ.8,498.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.