ஆப்பிரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் எம்பிவி மாடல் 2 நட்சத்திரம் மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பிலும் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது.
ட்ரைபர் மாடல் இரண்டு ஏர்பேக்குகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்க சந்தைக்காக கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த மாடல்கள் ஆனது மிகவும் குறைவான மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது.
GNCAP அறிக்கையில் வயது வந்தோர் பாதுகாப்பில் அதிகபட்சமாக பெற வேண்டிய 34 புள்ளிகளுக்கு 22.29 புள்ளிகளை மட்டுமே பெற்று இருக்கின்றது. குறிப்பாக முன்புற மோதலின் போது ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர்களுக்கான பாதுகாப்பில் கழுத்து மற்றும் தலைக்கு சிறப்பானதாக அமைந்திருக்கின்றது. ஆனால் ஓட்டுனரின் நெஞ்சுப் பகுதி மற்றும் உடன் பயணிப்பவர்களுக்கான நெஞ்சுப் பகுதி பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளது. மேலும் ஓட்டுனருக்கான கால்களுக்கான பாதுகாப்பும் குறைவாக உள்ளது. மேலும் இந்த காரின் ஃபுட்வால் பகுதி மிகவும் ஸ்டேபிளாக இருந்தாலும் பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதே நேரத்தில் பாடிசெல் அன்ஸ்டேபிளாக இருக்கின்றது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு பதிலாக பெரும் 19.99 புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கின்றது. குறிப்பாக ISOFIX குழந்தைகளுக்கான இருக்கையில் பெரிய அளவிலான பாதுகாப்பினை வழங்கவில்லை.
This News GNCAP டெஸ்டில் 2 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ரெனால்ட் ட்ரைபர் appeared first on Automobile Tamilan.