Paris Olympics 2024 Live Updates : டாப் கியரில் இந்திய முகாம்; வெற்றி மேல் வெற்றி! Day 5 Updates

ஹெச்.எஸ்.பிரணாய் வெற்றி

ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் வியட்நாம் வீரர் லீயை 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் வென்று ரவுண்டு ஆப் 16-க்கு தகுதிபெற்றார இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய்.

வில்வித்தையில் தோல்வி!

வில்வித்தையின் ரவுண்ட் ஆப் 64 சுற்றில் பிரிட்டன் வீரர் டாம் ஹாலுக்கு எதிராக 6-4 என்ற செட் புள்ளிகளின் கணக்கில் இந்திய வீரர் தருண்தீப் தோல்வி.

மனிகா பத்ரா தோல்வி!

டேபிள் டென்னிஸின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஜப்பானை சேர்ந்த ஹிரானோவுக்கு எதிராக இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 1-4 என்ற கேம் கணக்கில் தோல்வி!

தீபிகா குமாரி அசத்தல்!

வில்வித்தையின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நெதர்லாந்து வீராங்கனையை 6-2 என்ற செட் புள்ளிகளில் வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி.

வில்வித்தையில் வெற்றி!

வில்வித்தை ரவுண்ட் ஆப் 64 சுற்றில் எஸ்தோனிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் லவ்லினா!

குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் நார்வே வீராங்கனை சுனிவாவை 5-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா.

நம்பர் 1 வீராங்கனையுடன் மோதல்!

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஸ்ரீஜா அகுலா ரவுண்ட் ஆப் 16 சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனை சுன் யிங்ஷாவை எதிர்கொள்கிறார். இந்தப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு நடக்கவிருக்கிறது.

காலிறுதிக்கு முன்னேறுவாறா லவ்லினா?

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றிருந்த இந்திய வீராங்கனை லவ்லினா, இப்போது 75 கிலோ எடைப்பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் நார்வே வீராங்கனை சுனிவா ஹாப்ஸ்டாத்துக்கு எதிராக மோதவிருக்கிறார். இந்தப் போட்டியில் வென்றால்தான் லவ்லினா காலிறுதிக்கு முன்னேற முடியும்.

டேபிள் டென்னிஸில் வெற்றி!

டேபிள் டென்னிஸ் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா சிங்கப்பூர் வீராங்கனைக்கு எதிராக 4-2 என்ற கணக்கில் வெற்றி. இதன்மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு ஸ்ரீஜா அகுலா முன்னிலை!

ஸ்ரீஜா அகுலா முன்னிலை!

டேபிள் டென்னிஸ் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா சிங்கப்பூர் வீராங்கனையை எதிர்த்து ஆடி வருகிறார். முதல் கேமை இழந்த நிலையில் சிறப்பாக மீண்டெழுந்து அடுத்த இரண்டு கேம்களையும் வென்று நம்பிக்கையோடு ஆடி வருகிறார்.

பேட்மிண்டனில் வெற்றி!

உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தோனேசியா வீரர் ஜொனாதன் கிறிஸ்டிக்கு எதிரான ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் 21-18, 21-12 என நேர் செட் கணக்கில் வெற்றி.

லக்ஷயா சென் அசத்தல்!

பேட்மிண்டனில் இந்தோனேஷிய வீரரான ஜோனாதன் கிறிஸ்டிக்கு எதிராக இந்திய வீரர் லக்ஷயா சென் முதல் செட்டில் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார். 2-8 என பின்னடைவை சந்தித்திருந்தார். ஆனால் மீண்டெழுந்து தொடர்ச்சியாக 7 புள்ளிகளை எடுத்து 9-8 என முன்னிலை பெற்றார். இப்போது 21-18 என முதல் செட்டை வெல்லவும் செய்திருக்கிறார்.

இறுதிப்போட்டியில் ஸ்வப்னில்!

ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தகுதிச்சுற்றில் ஏழாவது இடம்பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஸ்வப்னில் குஷல். 11-வது இடம்பிடித்த மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் வெளியேறினார்.

சிந்து வெற்றி; அடுத்தச்சுற்றுக்கு முன்னேற்றம்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் குரூப் போட்டியில் எஸ்தோனியா வீராங்கனையை 21-5, 21-10 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதிபெற்றார் இந்தியாவின் பி.வி.சிந்து.

சிந்து அசத்தல்!

எஸ்தோனியா வீராங்கனைக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து 21-5 என முதல் செட்டை எளிதில் வென்றார்.

துப்பாக்கிச்சுடுதலில் சாதிப்பார்களா?

துப்பாக்கிச்சுடுதலில் 50 மீ 3P பிரிவில் இன்னும் 2 சீரிஸ்கள் மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில் இந்திய வீரர் தோமர் 8 வது இடத்திலும் குசேல் 10 வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்த தகுதிச்சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டும்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள்.

பதக்கப்பட்டியல்

இந்தியாவின் இன்றைய போட்டி அட்டவணை!

இன்றைய அப்டேட்கள்!

இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டிகளைப் பற்றிய லைவ் அப்டேட்ஸ்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.