Wayanad landslide: `ஒரு கிராமம் இருந்த தடயமே இல்லை' – வயநாட்டில் அளவிட முடியாத சேதம் | Spot Update

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டிருக்கும் பயங்கர நிலச்சரிவு ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மண்டைகை மலையில் கொட்டித்தீர்த்த பெருமழையில் மலையே உருக்குலைந்து கீழ்நோக்கி சரிந்திருக்கிறது. நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 5.30 வரை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு பேரிடரை ஏற்படுத்தியிருக்கிறது.

காட்டாற்று வெள்ளத்துடன் மலை உச்சியில் இருந்து அடித்து வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான ராட்சத பாறைகள் மற்றும் ராட்சத மரங்கள் அந்த பகுதியையே புரட்டிப் போட்டிருக்கிறது‌.

மண்டகை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த தடமே தெரியாது அளவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவுகளில் சிக்கியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் பலரின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலை நீடிக்கிறது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். பாலம் சிதைந்ததால் ஆற்றின் மறுகரையில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களை கயிறு மூலம் மீட்டு வருகின்றனர்.

இந்த கோர நிகழ்வு குறித்து உள்ளுர் மக்கள் பேசுகையில், ” சில மணி நேரத்தில் இந்த பகுதியே நரகமாக மாறியிருக்கிறது. கொடூரமாக சிதைத்து கிடக்கும் மனித உடல்களை பார்க்கவே முடியவில்லை. வீடுகள் இருந்த இடத்தில் பாறைகள் தான் இருக்கிறது. மண்டகை கிராமம் இருந்த தடமே இல்லை” என கண்ணீர் வடிக்கின்றனர்

நிலச்சரிவு

மீட்பு குழுவினர் பேசுகையில், “ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தி மீட்டு வருகிறோம். இப்படி ஒரு பேரிடரை எங்கும் பார்த்ததில்லை. தன்னார்வலர்கள் முதல் ராணுவம் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் களத்தில் இருக்கிறோம். அணுக முடியாத பகுதிகளில் பாதிப்பு இன்னும் அதிகமாக காணப்படுகிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.