20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சாதனை!

மதுரை: இன்று 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உலகநேரியில் 24.07.2004-ல் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் மதுரை அமர்வில் விசாரிக் கப்படுகின்றன. நாட்டின் பசுமையான அமர்வு என மதுரை அமர்வு அழைக்கப்படுகிறது. … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறை தரப்பை கேள்விகளால் திணறடித்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: “இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள்” என்று செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் … Read more

AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்

ஜப்பான் நாட்டில் தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் ஏஐ உதவியை நாடியுள்ளது ஒரு நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம். 2022-ன் இறுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சு உலக அளவில் வைரல் ஆனது. அதுவரை டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் மக்களிடையே ஏஐ இருந்தாலும் அது அதிக அளவில் கவனம் பெறாமல் இருந்தது என்று சொல்லலாம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் ‘சாட்-ஜிபிடி’ வரவு அதனை அப்படியே மாற்றியது. … Read more

S.J.Surya: “நெல்சன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் ஏன்னா…”- எஸ்.ஜே.சூர்யா கலகல பேச்சு

நடிகராகும் கனவுடன் திரையுலகில் காலடி எடுத்துவைத்து, உதவி இயக்கநராகப் பணியாற்றிய, பின் இயக்குநராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி ‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ ஆகிய திரைப்படங்களைக் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. பிறகு இறைவி படத்தின் மூலம் மிகப் பெரிய ப்ரேக் கிடைக்க தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் தற்போது கலக்கி வருகிறார். எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் நடந்த 2023ம் ஆண்டுக்கான ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ விழாவில் ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா … Read more

Reliance Jio: வாடிக்கையாளர் குரலுக்கு செவி சாய்த்த ஜியோ… ரூ.349 பிளானில் அதிரடி மாற்றம்

Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில், கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று, வாட்டத்தில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் எதிர்பாராத வகையில் மாற்றம் செய்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களின் குறைக்கு செவிசாய்க்கும் வகையில், ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த பிறகு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் … Read more

கைதான மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் அந்த கடிதத்தில், ”இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22-7-2024 அன்று IND-TN-10-MM-2517 IND-TN-10-MM-284 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் … Read more

சமஸ்கிருதத்தில் பகவத்கீதை.. மாணவரிடம் மைக்கை பறித்த முதல்வருக்கு சிக்கல்.. பாய்ந்த வழக்கு

போபால்: மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் Poem படிப்பதற்கு பதில் சமஸ்கிருதத்தில் பகவத்கீதை வரிகளை கூறிய மாணவரிடம் இருந்து மைக்கை பிடுங்கிய பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிக்கு சொந்தமான Source Link

அந்தகன் படத்தில் நடிக்க வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த ஊர்வசி! காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு,

மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக அஜிங்யா நாயக் தேர்வு

மும்பை, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல் காலே, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது மரணம் அடைந்தார். இதையடுத்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சரத்பவாரின் ஆதரவாளர் அஜிங்யா நாயக் 221-114 என்ற ஓட்டு வித்தியாசத்தில் சஞ்சய் நாயக்கை வீழ்த்தி மும்பை கிரிக்கெட் சங்கத்தின் புதிய … Read more

இந்தோனேசியாவில் ரிக்டர் 5.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மானிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். தினத்தந்தி Related Tags : Earthquake  நிலநடுக்கம்