சாரதி அனுமதிப்பத்திரங்களை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் புதிய நடைமுறை

சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எதிர்வரும் வேலைத்திட்டம் மற்றும் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகின் பிற நாடுகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களை கருப்புப் பட்டியலில் (Black List) இடுவதனூடாக, … Read more

`2026 சட்டப்பேரவைத் தேர்தல்; தேனியில் போட்டியிடுகிறேனா?' – டி.டி.வி.தினகரன் விளக்கம்!

தேனி பழனிசெட்டிபட்டியில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பணியாற்றுவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன. குறிப்பாக கிளை அமைப்புகள், பூத் ஏஜென்ட்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் எப்படி தேர்தல் வேலைகள் பார்க்க வேண்டும் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தோம். ஆலோசனைக் கூட்டம் தேனி பிடித்த ஊர் என்பதால் இங்கு குத்தகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். அதனால் இங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினோம். ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, … Read more

“திமுக ஆட்சியின் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்” – இபிஎஸ்

சென்னை: திமுக ஆட்சியில் நிலவும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் மக்களவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி … Read more

“வேலை தேடுபவர்களுக்கு நிதியமைச்சகம் உத்வேகம் அளித்துள்ளது” – அமைச்சர் சுரேஷ் கோபி

புதுடெல்லி: வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களுக்கும், வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கும் நிதியமைச்சகம் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது என்று பட்ஜெட் குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று (ஜூலை 23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரிடமிருந்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே மத்திய பட்ஜெட்டை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் … Read more

Vikram 63: விக்ரமின் 63வது படத்தை இயக்கப்போவது இவர்தானா? சர்ப்ரைஸ் கூட்டணி!

பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படத்தின் சென்ஸார் முடிந்திருக்கிறது. படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பதாகத் தகவல் வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்து வரும் விக்ரம், விரைவில் தான் அடுத்து நடிக்கும் படத்தை அறிவிக்க உள்ளார். ஒரு படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தைத் தொடங்குவது விக்ரமின் ஒர்க்கிங் ஸ்டைல். கதையைக் கேட்ட பின், அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதுடன் அதற்காகவே தன்னை … Read more

முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான்: அறப்போர் இயக்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட துணைவேந்தர் வேல்ராஜ்…

சென்னை: அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியன் எதிரொலியாக,   முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது  நடவடிக்கை எடுக்க  அண்ணா பல்கலை துணைவேந்தர்  கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் அண்ணா பல்கலைக்கழகம் மீது குற்றம்சாட்டியது. மேலும் இதற்கு அனுமதி வழங்கி அதிகாரிகளை … Read more

தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக மே.வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

கொல்கத்தா: தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க மாநில சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேற்கு வங்க மாநில அரசே நீட் நுழைவுத் தேர்வு அறிமுகத்துக்கு முன்னர் நடத்திய பொது நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மாநில சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி உள்ளது. Source Link

பிரசாந்த்திற்கு கிடைத்ததைப் போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை – எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார்

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் அந்தகன். இந்த படத்தினை நடிகரும் இயக்குநரும் நடிகர் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி, செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை. எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வாதம் … Read more

சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு – மதீஷா பதிரனா

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி சரித் அசலங்கா தலைமையில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக ஆடும் மதீஷா பதிரனா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் குறித்து பதிரனா சில கருத்துகளை … Read more