பிரபல நடிகையிடம் மேடையிலேயே அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்னு சொன்ன மாதவன்.. அட இது எப்போ நடந்தது?

சென்னை: தென்னிந்திய சினிமா உலகமே தற்போது மிகவும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் விஷயங்களில் ஒன்று சைமா விருதுகள் முக்கிய இடம் வகிக்கின்றது எனலாம். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சைமா விருதுகள் விழா மேடையில் நடிகர் மாதவன், மலையாள நடிகை காவ்யா மதாவனிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் எனக் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகின்றது.

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி, 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு மொத்தம் ரூ.3,442.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.45.36 கோடி அதிகமாகும். கடந்த முறை ரூ.3,396.96 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இளைஞர்களின் திறமையை வளர்க்க நடத்தப்படும் கேலோ இந்தியா போட்டிகளுக்கு பெரும்பங்காக ரூ.900 கோடி அளிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.20 கோடி அதிகமாகும். தேசிய … Read more

இஸ்ரேலில் 262 கட்டுமானத் துறை தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற 262 பேருக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று (23) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது. அவர்கள்; இம்மாதம் 27 முதல் 30ஆம் திகதிக்குள் இஸ்ரேல் செல்ல உள்ளனர்.

திமுக vs பாஜக… கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் – அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?!

கட்சியில் ரெளடிகள் லிஸ்ட்: குற்றப்பின்னணியில் இருப்பவர்களைத் தொடர்ந்து பாஜக-வில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக-வில் பலரும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அதற்கேற்றாப்போலவே படப்பை குணா தொடங்கி தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் அஞ்சலை வரை குற்றப்பின்னணியிலிருந்த பலரும் பாஜக-வில் உறுப்பினர்களாக இணைந்த சம்பவமும் நடந்தது. இது குறித்து சமீபத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, `பாஜகவில் உள்ள 261 பேர் குற்றவாளிகள் எனவும் அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்’ குற்றச்சாட்டை … Read more

மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்துக்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிஎம்.பி-க்கள் கடந்த காலங்களை … Read more

நிதி இல்லாததால் ஆந்திர மாநில பட்ஜெட் தள்ளிவைப்பு: பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கடந்த பிப்ரவரியில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ரூ.2.86 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு பதவியேற்ற சந்திரபாபு நாயுடு அரசு, இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கலை செப்டம்பர் வரை தள்ளி வைத்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து பட்ஜெட் தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது: கடந்த ஜெகன் … Read more

இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள்

சென்னை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரம் இதோ வாரந்தோறும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியானாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம். இயக்குனர் ஷிஜின்லால் இயக்கத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் திரில்லர் திரைப்படம் ‘கிராண்மா’. இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் புகழ் யுகேந்திரன் நடிப்பில் உருவான … Read more

மகள் மறைவுக்குப் பின்னர் விஜய் ஆண்டனியின் முதல் பிறந்த நாள்! வாழ்த்துகளுக்கு மத்தியில் உருகும் தந்தை

சென்னை: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தன்னை சினிமாவின் பலதரப்பட்ட துறைகளில் கால் பதித்து அதில் வெற்றியும் கண்ட கலைஞனாக வலம் வருகின்றார் விஜய் ஆண்டனி. 1975ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிறந்த விஜய் ஆண்டனி இன்று தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். சினிமாவிற்கு வந்த பின்னர்

பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை: மத்திய பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

சென்னை: ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஏழை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்டை வழங்கிய பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வாழ்த்துகள். இந்த முன்னோக்கு பட்ஜெட், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிப்பதுடன், மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை … Read more

லட்டு பிரசாதம் தயாரிக்க தரமற்ற நெய் வழங்கிய நிறுவனத்துக்கு நோட்டீஸ்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியான சியாமள ராவ், சில நாட்களுக்கு முன் லட்டு பிரசாதம் தயாரிக்கும்மடப்பள்ளி ஊழியர்களை அழைத்து விசாரித்தார். லட்டுவில் சேர்க்கப்படும் பொருட்களை கொண்டு வரச்செய்து அவற்றை ஆய்வு செய்தார். இதில் லட்டு பிரசாதத்துக்கு டெண்டர் எடுத்திருக்கும் திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் பிரைவேட்லிமிடெட் நிறுவனம் தரமற்றநெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதுவரை இந்நிறுவனம் 68 ஆயிரம் கிலோ … Read more