செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை நேற்றிரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது . திடீர் எனஅவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மருத்துவர்கள் பரிந்துரையின் … Read more

சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்கியத்திற்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைத்து, சௌந்தர பாண்டி அவளை ரூமுக்குள் பூட்டி வைத்துவிடுகிறான். வீட்டிற்கு வரும் பரணி, பாக்கியம் ரூமில் வைத்து பல பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து காரணம்

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 24ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூலை 23ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் … Read more

பிரதமர் தலைமையில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளதால், பிரதமர் தலைமையில் ஜூலை 27-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியதாவது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று 2 நாட்கள் … Read more

நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பெங்களூரு: நீட் நுழைவுத் தேர்வில் இருந்து கர்நாடகாவுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தீர்மானத்தை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல கர்நாடகாவிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனவே முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவரின் ஒப்புதலுடன், நீட் … Read more

நிபா வைரஸ் பரவல் : தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கோயம்புத்தூர்’ கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அங்கு 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் வந்தது தெரியவந்தது. நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட மறுநாளே சிறுவன் உயிரிழந்துள்ளான். மத்திய அரசின் … Read more

அக்காவை தொடர்ந்து தங்கச்சிக்கும் ஆள் கிடைச்சுடுச்சா?.. அர்ஜுனின் 2வது மகளின் காதலன் இவர் தானா?

சென்னை: நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சூழ சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், அர்ஜுனின் 2வது மகளின் திருமணமும் சீக்கிரமே நடந்து விடும் போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யா அர்ஜுன்

“மத்திய பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும்” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

சென்னை: “ஒட்டுமொத்தமாக, மத்திய பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும். மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்த உருப்படியான முன்னேற்றத்தையும் கொண்டு வராது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் அளிக்கவில்லை. மாறாக கடந்த காலங்களை போலவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உள்ளது. தனது கூட்டணி கட்சிகளை … Read more

“காங். தேர்தல் அறிக்கையை பட்ஜெட் உரையாக நிதியமைச்சர் படித்திருக்கிறார்” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்திருக்கிறார்” என்று மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30ல் … Read more

பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் : ராமதாஸ்

சென்னை பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்துகான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.   இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், … Read more