Andhagan first single: பிரஷாந்துக்கு நண்பன் விஜய் செய்யும் உதவி.. இதாண்டா நட்பு!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் முதல் பாடலை தளபதி விஜய் நாளை வெளியிட உள்ளார். கோட் படத்தில் பிரசாந்த் நடித்ததை அடுத்து இருவரும் நல்ல நண்பர்களாக மாறியதால், நண்பனுக்காக விஜய் இந்த உதவியை செய்ய உள்ளார். 90 காலகட்டத்தில்

உணவுத் திருவிழாவும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்  உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2024) காலை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஆவணி மாதம் 5, 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் பண்ணை சுற்றாடலில் நடைபெறவுள்ளது … Read more

நிலுவை நிதியை வழங்குக: மத்திய அமைச்சரிடம் அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் நேரில் கோரிக்கை

புதுடெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான இந்தச் சந்திப்பில், நிலுவை நிதி கோரப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பட்ஜெட் உரை முடிந்தவுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர … Read more

ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுடன் 1 கோடி நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் … Read more

இன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு

சென்னை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். கடந்த  2023 ஆம் வருடம் ஜூன் 15 ஆம் தேதி அன்று சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடி செலவில் உலக தரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், இருதயவியல் துறை, இருதய … Read more

அம்பானி மகன் திருமணம் மட்டுமல்ல.. லூலூ மால் நிர்வாகியின் மகள் திருமணத்துக்கும் சென்ற சூப்பர் ஸ்டார்!

சென்னை: இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்ற நாட்களுக்கு இணையாக அவர் திருமண விழாக்களில் பங்கேற்ற நாட்களும் இருக்கும் என்று கூறினால் அது மிகையாக இருக்காது என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அந்தளவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் திருமணங்கள், அயோத்தி கோயில் திறப்பு விழா, இமய

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப் பரிசில்கள் பிரிவேனா மற்றும் பிக்குணி மாணவர்களுக்கு நாளை ஜனாதிபதி தலைமையில் வழங்கப்படும்

3000 பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை (24) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி செயற்படுத்தப்படும் பிரிவேனா மற்றும் பிக்குணி கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் பிக்குகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. இதுவரை காலமும் பிரிவேன்களில் கற்கும் பிக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் எதுவும் … Read more

`வேற்றுமையில் ஒற்றுமை நம் சிறப்பு கிடையாது, ஆனால்…' – குமரியில் RSS தலைவர் மோகன் பகவத் பேசியதென்ன?

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 3 நாள்கள் தங்கியிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவரை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசுகையில், “பாரத நாடு மிகவும் பழமையானது, சீனாவைவிடவும் மிகவும் பழமையான நாடு நம் பாரத நாடு. ரோம், கிரேக்கம் போன்ற சாம்ராஜ்யங்கள் எல்லாம் உலகில் இருகந்தன. அவையெல்லாம் இன்று வெறும் மண்ணாக இருக்கின்றன. அங்கு, நாகரிகம் ஒன்றும் காணப்படவில்லை. … Read more

“நடுத்தர மக்களுக்கு பயன் தரும் மத்திய பட்ஜெட்” – அண்ணாமலை பாராட்டு

நாகர்கோவில்: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்துள்ளது, வளர்ச்சிக்கான பட்ஜெட். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழகருப்புக்கோடு பகுதியை சேர்ந்த வேலாயுதன், தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவாக இருந்தவர் . குமரி மாவட்டத்தின் வளர்ச்சியிலும் பாஜக கட்சியை வளர்த்ததிலும் பெரும் பங்கு கொண்ட வேலாயுதன் உடல் நலக்குறைவால் … Read more

ஆறு முறை இடம்பெற்ற தமிழ் உவமைகள் இம்முறை இல்லை: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் ஏமாற்றம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் ஆறு பொது பட்ஜெட்களில் இடம்பெற்ற தமிழ் உவமைகள் இந்தமுறை இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் டெல்லியில் படித்து வளர்ந்தவர். இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பாரகலா பிரபாகர் என்பவருடன் மணமாகி பாரகலா வங்கமாயி என ஒரு மகள் உள்ளார். கடந்த 2014 ஆட்சியில் பாஜகவுக்காக ஆந்திரா மாநிலம் சார்பில் மாநிலங்களவைக்கு … Read more