“சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கும் மத்திய பட்ஜெட்!” – பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: “வளர்ந்த இந்தியாவுக்கான இந்த பட்ஜெட் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிப்பதுடன் வளர்ந்த இந்தியாவுக்கு வழி வகுக்கிறது” என்று மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 2024-25-க்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: “மத்திய பட்ஜெட் 2024-25, சமூகத்தின் … Read more

Suriya 44: சூர்யா 44 படத்தின் அப்டேட் இதோ.. இதுதானா டைட்டில்?

Suriya 44 Update: இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நெஞ்சுவலி போயிந்தே: இரண்டே நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி

சென்னை: நெஞ்சுவலி காரணமாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டே நாளில் அவரது நெஞ்சுவலி சரியானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது 22ந்தேதிகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்த  நிலையில், அவருக்கு சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில், முக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்ட  நிலையில், அவரது வழக்கும் … Read more

எலான் மஸ்க்கிற்கு சீனா தரும் தொல்லை.. ஸ்டார்லிங்கை லேசர் துப்பாக்கியால் சுட திட்டம்! பகீர் பின்னணி

பெய்ஜிங்: உலகில் இணையதள சேவை வழங்கப்பட முடியாத தொலைதூர பகுதிகளுக்கு எலான் மஸ்க்கின், ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கி வருகிறது. இருப்பினும் இது சீன நாட்டின் தகவல்களை திருட முயன்றால் லேசர் துப்பாக்கி மூலம் அதை சுட்டு வீழ்த்த அந்நாட்டு ராணுவம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க். Source Link

OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: ஒவ்வொரு வார இறுதியிலும் புது புது படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதால், மக்கள் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை பொறுத்திருந்து ஓடிடி தளத்திலேயே குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். இந்த வகையில் நீங்கள் தியேட்டரில் தவறவிட்ட படங்களை ஓடிடியில் பார்த்து மகிழலாம். அந்த வகையில் இன்று என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம். சட்னி சாம்பார் : வெள்ளித்திரையில் கலக்கி

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125 பைக்கில் 2 கிலோ கொள்ளளவு பெற்ற சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. Bajaj Freedom 125 CNG True Mileage ஃப்ரீடம் 125 மாடலில் பொருத்தப்பட்டுள்ள 124.8cc என்ஜின் CNG … Read more

அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, பரிந்துரைகளை பெறும் பணிகளை ஆரம்பித்தது

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். அனைத்து முன்மொழிவுகளையும் MS Wordஇல் Iskoola Pota எழுத்துருவில் 12 அளவில் அதன் மென் பிரதியை PDF வடிவில் மாத்திரம் தயாரித்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற உத்தியோகபூர்வ முகவரிக்கு … Read more

Union Budget: பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டும்… எதிர்க்கட்சித் தலைவர்களின் ரியாக்சன்களும்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2024-25) நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில், `புதிய வருமான வரி வரம்புகளின்படி ரூ.3 லட்சம் வரையில் வருமான வரி கிடையாது. ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்கள் என ஐந்தாண்டுகளுக்கு ஐந்து கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் மாதம் ரூ.5,000 கொடுப்பனவுடன் பயிற்சி. தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் … Read more

“மத்திய பட்ஜெட்டில் தமிழக முதல்வரின் கோரிக்கைகள் புறக்கணிப்பு” – வைகோ காட்டம்

சென்னை: “அசாம், உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ள பாதிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதைப்போல பிஹார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார்,” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். வேறு சிலர், தேர்வை ரத்து செய்யக்கூடாது; மறு தேர்வு நடத்த தேசிய தேர்வு … Read more