அண்ணா சீரியல் அப்டேட்: சூடாமணி கொடுத்த சர்ப்ரைஸ்.. சௌந்தரபாண்டியன் அதிர்ச்சி

Anna TV Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

'நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்' – பட்ஜெட் அறிவிப்பால் கண்சிவந்த ஸ்டாலின்

MK Stalin Boycotting Niti Ayog Meeting: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் தூரோகம் என விமர்சித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.  

ராகுல் டிராவிட் ஐபிஎல் ரிட்டர்ன்ஸ் உறுதி, கேகேஆர் இல்லை – பேச்சுவார்த்தை நடத்தும் அணி இதுதான்

Rahul Dravid IPL Return : ராகுல் டிராவிட் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக திரும்ப இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைவார் என கூறப்பட்டது. அதற்காக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இப்போது மற்றொரு அணியும் ராகுல் டிராவிட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் தான் அந்த அணி. ஆர்ஆர் அணிக்காக விளையாடிய டிராவிட் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். அதனால் … Read more

A.R Rahman: “மணிரத்னம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்!" – ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி!

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஃபிலிம்பேர் விருதைப் பெற்றிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து இயக்குனர் மணிரத்னத்தையும் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பல நட்சத்திரங்களை களமிறக்கி இருந்தார் மணிரத்னம். ஏ.ஆர் … Read more

நிலச்சரிவால் எத்தியோப்பியாவில் 157 பேர் பலி

கென்சோ சாச்சா கோஸ்டி எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமானோர் புதைந்தால் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நேற்று மாலை வரை … Read more

சூரியின் கொட்டுக்காளி.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் எப்போது

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது. முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.. இதன்படி எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.   விவசாய … Read more

`RSS-ல் இனி அரசு ஊழியர்களுக்கு தடை இல்லை!’ – பாஜக அரசின் அனுமதியும் பின்னணியும்

கடந்த மக்களவைத் தேர்தலில், ‘400 இடங்களில் வெல்வோம்’ என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்த நிலையில், 240 இடங்களில்தான் பா.ஜ.க ஜெயித்தது. அத்துடன், பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் உ.பி-யில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க இடையே மோதல் போக்கு நிலவுவதாக செய்திகள் வெளியாகின. மோடி இந்த நிலையில், ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரக் கூடாது’ என்று 58 ஆண்டுகளாக இருந்துவந்த தடையை மோடி அரசு நீக்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் … Read more

“59% மக்களுக்கு வேலை தரும் விவசாயத்துக்கு பட்ஜெட்டில் வெறும் 2.78% ஒதுக்கீடு” – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

சென்னை: “இந்தியாவின் இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை ரூ.47.66 லட்சம் கோடிகளாகும். அதில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 1.5 லட்சம் கோடி மட்டுமே. அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 2.78% மட்டுமே ஆகும். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசியல் கட்சிகள் வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிக மிக குறைவாக இருந்து வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையிலும் அது தொடர்ந்துள்ளது,” என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரான வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியுள்ளார். இது … Read more

“பாஜகவின் நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்” – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் … Read more