திருமூர்த்தி அணை நிரம்பவில்லை… கேரளாவுக்கு செல்கிறதா உபரி நீர்?கேள்வியெழுப்பும் விவசாயிகள்!

கேரளா மற்றும் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதையொட்டி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்(PAP) கீழ் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வர வேண்டும். ஆனால், இந்த முறை போதுமான தண்ணீர் இன்னும் வரவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி செஞ்சேரிமலை கதிரேசனிடம் பேசியபோது, “பி.ஏ.பி திட்டத்தில் கான்டூர் கால்வாய் 49 கி.மீ தொலைவுக்கு மலைத்தொடரில் அமைந்துள்ளது. போதிய பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கால்வாய் சிதிலமடைந்து, தண்ணீர் … Read more

புதுச்சேரி பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி: பட்ஜெட் கோப்பு அனுமதிக்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போனில் முதல்வர் ரங்கசாமி பேசிய நிலையில் இன்று பட்ஜெட் கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. புதுவை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவைத் தேர்தல் வந்ததும் இதற்கு ஓர் காரணம். அதற்கு பதிலாக 5 மாதங்களுக்கான செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல் முடிந்து, மாதிரி நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. … Read more

புதிதாக பணியில் சேருவோருக்கு ஒரு மாத ஊதியத்தை மத்திய அரசு வழங்கும்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: அனைத்து முறையான துறைகளிலும் புதிதாக பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மத்திய அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “பிரதமரின் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ‘வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை’ வழங்கும் 3 திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டங்கள் இபிஎஃப்ஓவில் (EPFO) … Read more

Budget 2024: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன…? யார் யாருக்கு குட் நியூஸ்?

Budget 2024: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.

சூர்யாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

Suriya Net Worth: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மற்றும் இந்த ஆண்டு படு பிஸியான நடிகராக வலம் வந்திருக்கும் நடிகர் சூர்யாவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். ​

தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் – திட்டமிட்ட புறக்கணிப்பா?

Nirmala Sitharaman : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 -25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் முதன்முறையாக தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒருமுறைகூட இடம்பெறவில்லை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நகலே இன்றைய பட்ஜெட்! மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்…

சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நகலே இன்றைய பட்ஜெட்  என  மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பாளராக இருந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில்,  கல்வித்துறை, வேளாண்துறை, புதிய வேலைவாய்ப்புகள், புதிய தொழில் நிறுவனங்கள் என ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த … Read more

அண்ணா ஒரு நிமிஷம்! திருச்செந்தூரில் அழைத்த பெண் துப்புரவு பணியாளர்கள்! உடனே யோகிபாபு செய்த செயல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார் காமெடி நடிகர் யோகிபாபு. அவருக்கு கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது மனைவி, குழந்தையுடன் வந்திருந்த அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் சகல மரியாதையையும் கொடுத்து உள்ளே அழைத்து சென்றனர். கோலிவுட்டில் அசைக்க முடியாத காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு. யாமிருக்க பயமேன் என்ற படத்தின் மூலம் Source Link

கள்ளச்சாராய மரணத்திற்கு பொங்கிய சூர்யா.. மறுபக்கம் இப்படியா? சூர்யாவை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா 44 படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்றிரவு 12மணிக்கு வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில், சூர்யா வாயில் சிகரெட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து கிண்டலடித்துள்ளார். சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ்

காஷ்மீரில் அதிகாலையில் என்கவுண்ட்டர்; ராணுவ வீரர் காயம்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பத்தல் பிரிவில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றபோது, அதனை பாதுகாப்பு வீரர்கள் முறியடித்து உள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதற்கு முன், காஷ்மீரின் ரஜோரி பகுதியில் குண்டா கிராமத்தில் நேற்று பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு … Read more