மத்திய பட்ஜெட் 2024-25: ‘கரீப்’ (ஏழை), ‘யுவா’ (இளைஞர்), ‘அன்னதாதா’ (விவசாயி) மற்றும் ‘நாரி’ (பெண்கள்) முக்கியத்துவம்!

டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 7வது முறையாக மத்திய முழு  நிதி நிலையை அறிக்கையை  நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசிக்கும் வகையில்  உள்ளது, அது தொடரும் என்றார். தொடர்ந்து   முக்கியமாக  4 முக்கிய கவனம் … Read more

120 கிலோ எடை! 10 கிலோ உணவு சேலஞ்ச்! பிரபல யூடியூபரின் வயிறு சிதைந்து லைவ் வீடியோவில் பலி

பெய்ஜிங்: யூடியூப் சேனலில் அதிக லைக்ஸ்களையும் ஷேர்களையும் பெற வேண்டும் என்ற நோக்கில் லைவ் வீடியோவில் அளவுக்கு அதிகமான உணவுகளை உட்கொண்ட சீன பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தனது யூடியூப்பை பிரபலப்படுத்தவும் சம்பாதிக்கவும் உயிரையும் பணயம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வேதனையான விஷயமாகும். இளைஞர்கள் ஆன்லைன் மோகத்தில் சிக்கி சீரழிந்து Source Link

விட்டா ஜெயிலர் மருமகள் சிக்ஸ்பேக் வச்சிடுவாரு போல.. எல்லா ஆங்கிள்லயும் சும்மா ஃபயரா இருக்காரே!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை மிர்னா மேனன். பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானவர் தான் இவர். அந்த பெயர் அவருக்கு வெற்றிப் படங்களை கொடுக்காத நிலையில், மிர்னா

மேகதாது திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் – மத்திய மந்திரி குமாரசாமி

புதுடெல்லி, மத்திய கனரக தொழில்துறை மந்திரி குமாரசாமி டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டிற்கு தினமும் 5, 6 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் செல்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை விட தமிழகத்திற்கு கூடுதல் நீர் சென்றுள்ளது. தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் எப்போதும் தொல்லை கொடுத்தது இல்லை. உபரி நீரை பயன்படுத்தும் விஷயத்தில் கர்நாடகத்தின் மேகதாது திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசு சில்லரை … Read more

ரபேயா கான் அசத்தல் பந்துவீச்சு…தாய்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காளதேசம்

தம்புல்லா, மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு தம்புல்லாவில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – தாய்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தாய்லாந்து வீராங்கனைகள் வங்காளதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த தாய்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. தாய்லாந்து தரப்பில் பூச்சாதம் 40 … Read more

வன்முறை வழக்கில் 4 நாட்களில் தீர்ப்பளித்து அபுதாபி கோர்ட்டு அதிரடி- 3 பேருக்கு ஆயுள் தண்டனை

அபுதாபி, வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து டாக்கா ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வங்காளதேச அரசு தொடுத்த மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனை அடுத்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆளும் கட்சிக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் … Read more

சிரமங்கள் இருந்த போதிலும் 16,000 ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது

• இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்தால் முடிந்தது – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.   வரலாற்றில் மிகவும் கடினமான நிலைக்கு மக்கள் முகம்கொடுத்த போது நாட்டை மீட்கும் பொறுப்பை எவரும் ஏற்காத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதுடன், இரண்டு … Read more

கர்நாடகா: `முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக கூற கட்டாயப்படுத்தினார்கள்!’ – ED அதிகாரிகள் மீது புகார்

கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி வாரியத்தில் கணக்காளராக பணியாற்றிய சந்திரசேகரன் கடந்த மே 26-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரிடமிருந்து கிடைத்த கடிதத்தில், வால்மீகி வளர்ச்சி கழகத்தின் நிதியில் (ரூ.187 கோடி ரூபாய்) ஊழல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நகேந்திரன் தன் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக – அமலாக்கத்துறை இது தொடர்பான விசாரணையில் ஹைதராபாத்தை சேர்ந்த கூட்டுறவு சங்கத்தின் … Read more

டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெற உடனடியாக டெண்டர்: அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை உடனடியாக விட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். ஆனால், இந்த … Read more

கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டது எப்படி? – சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்

மலப்புரம்: கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அச்சிறுவன் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன் பழந்தின்னி வவ்வால்கள் இருக்கும் தங்கள் பகுதியில் உள்ளூர் பழத்தை சாப்பிட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது நிபா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து நிபா வைரஸ் பரவல் குறித்து மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று மலப்புரத் தில் மறுஆய்வு … Read more