Budget 2024: ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்… பட்ஜெட்டில் இந்த 5 அறிவிப்புகள் வருமா?

Expectations In Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதன் மீதான ஐந்து முக்கிய எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம். 

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது! திமுக விளக்கம்..

சென்னை: அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக மேலும் சிறப்பாகசெயல்படுத்துகிறது. பேதம்பார்க்கும் பண்பு எங்களிடம் இல்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி மானியம்  உள்பட பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் அம்மா உணவகத்தை கண்டுகொள்ளாத நிலையில், அதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததும், தற்போது அம்மா உணவகத்தை சீரமைக்க திமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலினும் நேரில் … Read more

சூர்யாவை விட பல கோடிக்கு சொந்தக்காரி ஜோதிகா.. மும்பையில் மட்டும் பல சொத்து!

சென்னை: நடிகர் சூர்யா இன்று தனது, பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் இவர்களுக்கு இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இணையவாசிகள் சிலர் ஜோதிகாவிற்கு எவ்வளவு சொத்து என்பதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மும்பையில் இருந்து தமிழ் துறையில் நடிகையாக அறிமுகம்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 60,290 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இந்த நிலையில் மழை பெய்யாததால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும், திறக்கப்படும் … Read more

அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்

அபுதாபி, அபுதாபியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் நேரடி விமான சேவை இருந்து வருகிறது. இதில் அந்த நிறுவனத்தின் விமானம் இன்று அபுதாபி ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்டது. மேலே பறந்து கொண்ட சில நிமிடங்களில் அந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுதாரித்துகொண்ட விமானிகள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இண்டிகோ விமானத்தை மஸ்கட்டில் தரையிறக்க … Read more

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பிரச்சினைகள் அணுகப்படும் – கடற்றொழில் அமைச்சர்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகள் ஆதங்கம் போன்றவற்றின் அடிப்படையில் பிரச்சினைகள் அணுகப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வைத்தியர் அருச்சுனாவின் துணிச்சலான செயற்பாடுகளே, வைத்தியசாலை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். வைத்தியர் அருச்சுனா தொடரந்தும்  பிரதேசங்களில் கடமையாற்ற வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் … Read more

Union Budget 2024-25 Live: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்… முக்கிய அம்சங்கள் என்னென்ன?

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது மத்திய பட்ஜெட் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது மத்திய பட்ஜெட் 1959-ம் ஆண்டு முதல் 1964 வரையில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்… முந்தைய தேசாய் சாதனையை முறியடித்து தொடர்ந்து ஏழு முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற புதிய சாதனையை … Read more

தமிழகத்தில் முதல்முறையாக 3,500 சதுரஅடி பரப்பு வரை வீடு கட்ட ஆன்லைனில் கட்டிட அனுமதி: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக வீடுகளுக்கு கட்டிட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார். வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின்கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சார்பில், தமிழகத்தில் முதல்முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் ஒருங்கிணைந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான … Read more

வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரம்: 4,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மற்றும் சிறுபான்மையினர் என பல வகைகளில் வங்கதேசத்தில் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை ரத்து செய்ய கோரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அது கலவரமாக மாறி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் 7 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு என்றும் உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. இதற்கிடையில், … Read more

Budget 2024: மின்சார வாகனங்கள் விலை குறையுமா? சாமனிய மக்களின் எதிர்பார்ப்புகள்…

Demands For Automobile Sector : 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக நடைபெறும் நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதும், தொடர்ந்து மூன்றாவது முறையாக 7 சதவீதத்துக்கும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. … Read more