சீன மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு விழா

இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று முன்தினம் (ஜூலை 29) கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவரான அதிமேதகு கி சென்ஹோங் மற்றும் சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சோவ் போவ் ஆகியோரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் … Read more

நிதி நிறுவனத்தில் 29 கிலோ தங்கத்தை திருடி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு – பணத்தை இழந்த ஊழியர்கள் கைது

மும்பையில் ரோவர் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் டோம்பிவலி கிளையில் சிவ்குமார் என்பவர் மேலாளராக இருந்தார். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் மீது கடன் கொடுத்துவிட்டு தங்கத்தை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். சமீபத்தில் கம்பெனி தரப்பில் மேலிடத்தில் இருந்து வந்த அதிகாரிகள் லாக்கரில் இருந்த தங்க நகைகளை ஆடிட் செய்தனர். இதில் 260 பாக்கெட்களில் இருந்த 29 கிலோ தங்கம் காணாமல் போய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் … Read more

“காடுகளை அழித்து தோட்டப்பயிர் வளர்ப்பதே வயநாடு நிலச்சரிவுக்கு முக்கிய காரணம்” – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், வயநாடு பேரிடருக்கான காரணம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலநிலை விஞ்ஞானியும் புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ராஜீவன் கூறியதாவது: கேரளாவின் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இத்தகைய தொடர் மழை காரணமாக மணல் மிருதுவாகி அரிப்பு ஏற்படுவது எளிதாகிவிட்டது. … Read more

‘கார் ரேஸ்’ நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதா? விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு 25,000 முதல் 1,00,00,000 வரை  தொழிலதிபர்களை மிரட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயிநிதியின் ஏற்பாட்டின் பேரில் பணம்  பறிக்கப்படுவதாகவும்,`நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் நடைபெற உள்ள  பார்முலா4 கார்  பந்தய நிகழ்ச்சி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த போட்டி  … Read more

கண்ணா மூனு லட்டு திங்க ஆசையா? சர்தார் 2 படத்தில் 3 கதாநாயகிகள்! எல்லாம் தரமா இருக்காங்களே!

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. இந்த படம் கடந்த 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு, கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படிப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லையே என ரசிகர்கள் காத்துக்கொண்டு

ஓடும் பேருந்தில்… பயணிகள் இருக்கும்போதே பாலியல் வன்கொடுமை – தெலங்கானாவில் அதிர்ச்சி

கடந்த திங்கள் கிழமை தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்திலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டிருக்கிறது. அந்தப் பேருந்தில் 26 வயது பெண் ஒருவர் பயணித்திருக்கிறார். நள்ளிரவில் பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது இரு ஓட்டுநர்களில் ஒருவர், தனியாக ஸ்லீப்பரில் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் வாயில் போர்வையை திணித்து, பயணிகள் இருக்கும்போதே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், ஹைதராபாத் புறநகரில் பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது ‘100’க்கு அழைத்து, காவல்துறைக்குத் தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை … Read more

வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல்: மீட்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

சென்னை: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே நடந்த மிகப்பெரிய நிலச்சரிவில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன். … Read more

வந்தே பாரத் ரயிலில் சைவ உணவுக்கு பதில் அசைவ உணவு வழங்கிய ஊழியரை அறைந்த பயணி

புதுடெல்லி: ரயில் பயணத்தின் கேட்டரிங் மூலம் விநியோகிக்கப்படும் உண வுகளால் பல பிரச்சினைகள்ஏற்படுவது வழக்கம். உணவின்தரம், சுவை சரியில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சிலநேரங்களில் உணவு கெட்டுப்போகிவிட்டதாகவும் புகார் எழுகிறது. ஆனால் சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. ஹவுராவிலிருந்து ராஞ்சிக்கு கடந்த 26-ம் தேதி வந்தே பாரத் ரயில் சென்றது. அதில் சைவ உணவு முன்பதிவு செய்திருந்த வயதான பயணி ஒருவருக்கு, கேட்டரிங் ஊழியர் தவறுதலாக அசைவ உணவு பார்சலை … Read more

மீண்டும் முடங்கியது மைக்ரோசாஃப்ட் சேவைகள்! ஐரோப்பாவை பாதித்த Outage 2.0!!

கடந்த வாரத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த வாரமும், தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்துள்ளது. இந்த முறை ஏற்பட்டக் கோளாறு, மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் அஸூர் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை பாதித்தது. சில குறிப்பிட்ட மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகள் மற்றும் அஸூர் சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை அனுபவித்தனர். இந்த தொழில்நுட்பக் கோளாறு தொடர்பான தகவல்களை மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக X சமூக ஊடகத்தில் உறுதிப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த … Read more